/tamil-ie/media/media_files/uploads/2021/12/Nimishika.jpg)
Serial Actress Nimishika Lifestory : சீரியல்கள் ஒளிபரப்பும் முன்னணி தொலைக்காடசிகளில் ஒன்றாக சன்டிவியில், கண்ணான கண்ணே சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. தனது மனைவியின் மரணத்திற்கு காரணம் தனது மூத்த மகள்தான் என்று நினைக்கும் அப்பா அவளை வெறுத்து ஒதுக்குவதும், மகள் அப்பா பாசத்திற்கு ஏங்குவது போலவும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது.
இந்த சீரியலில் ப்ரித்விராஜ் அப்பாவாகவும், மகள் மீராவாக நிமிஷிகாவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியல் மீராவை சுற்றிய நகர்ந்து வருகிறது. அதை உணர்ந்து நிமிஷிகாவும் தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கு முன்பு இவர் ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியலே அவரை பிரபலப்படுத்தியுள்ளது என்று சொல்லலாம்.
ஆந்திராவை சேர்ந்த இவர் படிப்பதற்காக கோவை வந்துள்ளார். அதன்பிறகு மீடியா மீதுள்ள ஆர்வத்தில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காம்பியராக பணியாற்றி வந்துள்ளார். அதன்மூலம் விஜய்டிவி வாய்ப்பு பெற்ற நிமிஷிகா, கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்துள்ளார். இதில் நீலாம்பரி என்ற நெகட்டீவ் கதாப்பாத்திரத்தில் நடித்த நிமிஷிகாவுக்கு ஏரானமான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
மலையாளத்தில் அனுராகம் என்ற சீரியலில் நடித்து வந்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த இரண்டு சீரியல்களும், கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது சன்டிவியின் கண்ணான கண்ணே தொடரில் நடித்து வருகிறார். மேலும் மாடலிங் போட்டோஷூட்களில் அதிக ஆர்வம் கொண்ட நீமிஷிகாவுக்கு இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ்கள் ஏராளம். தற்போது சின்னத்திரையில் பெயர் பெற்றுள்ள நிமிஷிகா விரைவில் வெள்ளித்திரையில் வலம் வர காத்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.