நம்ம மீரா வா இது.... ஆச்சரியமா இருக்கே... சன்.டிவி சீரியல் நடிகையின் வைரல் வீடியோ

நிமிஷிகா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்

நிமிஷிகா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்

author-image
WebDesk
New Update
நம்ம மீரா வா இது.... ஆச்சரியமா இருக்கே... சன்.டிவி சீரியல் நடிகையின் வைரல் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் கண்ணான கண்ணே சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருபவர் நிமிஷிகா கிருஷ்ணன். விஜய் டிவியின் கடைக்குட்டி சிங்கம் சீரியல் மூலம் சின்னத்திரையில், அறிமுகமான இவர், அடுத்து மலையாளத்தில், அனுரகம் என்ற சீரியலில் நடித்தார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடரான கண்ணான கண்ணே சீரியலில் மீரா என்ற முதன்மை கேரக்டரில் நடித்துள்ளார். இதில் நாயகாக நடித்து வரும் ராகுல் ரவிக்கும் மீரா கேரக்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது சீரியலில் மீரா மற்றும் அவரது குடும்பத்தினர் பெரிய கஷ்டத்தை அனுபவித்து வருவது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்து வரும் எபிசோடுகளில் மீரா கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இதனால் கண்ணான கண்ணே சீரியலுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதால், சீரியலுக்கான டிஆர்பி ரேட்டிங் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், நடிப்பு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நிமிஷிகா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

Advertisment
Advertisements

அந்த வகையில் மாடர்ன் உடையில் அவர் தற்போது பதிவிட்டுள்ள வீடியோ கட்சி ஒன்று இணையத்தில வைரலாகி வருகிறது. இதுவரை 14 ஆயிரத்திற்கு அதிகமாக லைக்சை பெற்றுள்ள இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகினறனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kannana Kanne Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: