Advertisment

சன்டிவி சீரியலில் முக்கிய நடிகை விலகல்... காரணம் என்ன? ரசிகர்கள் குழப்பம்

Tamil Serial Update : யுவா மற்றும் மீரா ஆகியோரின் திருமணம் தொடர்பான எபிசோடுகள் டிஆர்பி ரேட்டிங்கில் மிளவைத்தது என்றே சொல்லாம்.

author-image
WebDesk
New Update
சன்டிவி சீரியலில் முக்கிய நடிகை விலகல்... காரணம் என்ன? ரசிகர்கள் குழப்பம்

Tamil Serial Kannana Kanne Update In Tamil : கொரோனா தொற்றின் ஆக்கிரமிப்பு தற்போது பெரும்பாலான மக்களை சீரியல் ரசிகர்களாக மாற்றியுள்ளது என்று சொல்லலாம். கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக வீட்டிற்குள் முடங்கி கிடந்த மக்களுக்கு சீரியல் ஒரு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல், டிவி சேனல்களும் நாளுக்கு நாள் புதிய சீரியல்களை களமிறங்கி வருகின்றனர்.

Advertisment

இப்படி என்டரி ஆகும் புதிய சீரியல்கள் ஒருபக்கம் பரபரப்பை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் பழைய சீரியல்களில் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் கேரக்டர் மாற்றம், திடீர் ட்விஸ்ட் என பல திருப்புமுனைகளை கொண்டு வருகின்றனர். ரசிகர்களை கவர நாள்தோறும் சேனல்கள் புதுப்புது முயற்சிகளை கையாண்டு வரும் பலனாக சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அநத வகையில் ரசிர்கள் மத்தியில் நாள்தோறும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல் கண்ணான கண்ணே. ராகுல் ரவி நிமிஷிகா ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் பப்லு ப்ரித்விராஜ் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல், டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

இதில் யுவா மற்றும் மீரா ஆகியோரின் திருமணம் தொடர்பான எபிசோடுகள் டிஆர்பி ரேட்டிங்கில் மிளவைத்தது என்றே சொல்லாம். அந்த எபிசோடுகள் ஒளிபரப்பாகும்போது யுவா யார் கழுத்தில் தாலி கட்டுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. தற்போது 300 எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலின் தினசரி எபிசோடுகள் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது நடிகை ஒருவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சீரியலில் யமுனா கேரக்டரில், மீராவின் சித்தி மற்றும் கௌதமின் 2-வது மனைவியாக நடித்து வந்த நிதியா தாஸ் தற்போது சீரியலில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஏன் விலகினார், அவருக்கு பதிலான யமுனா கேரக்டரில் யார் நடிக்க போகிறார் என்பது தொடர்பாக தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தாவை சேர்ந்த நித்யா தாஸ் தமிழில், பொன்மகள், மனதோடு மழைக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராமாள மலையாள படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் இதயம், அக்கா, பைரவி, அழகு உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Kannana Kanne Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment