Advertisment

சக நடிகருடன் நெருக்கம்... ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே! நெட்டிசன்கள் கேள்விக்கு சீரியல் நடிகை பதிலடி

சன் டிவியின் கல்யாண பரிசு சீரியலில் மூலம் பிரபலமானவர் நடிகை நிவேதிதா. இந்த சீரியலில் வாசுகி என்ற கேரக்டரில் நடித்து வந்த இவர், அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Actress Nivedhithe

திருமகள் சீரியல் நடிகை நிவேதிதா

வேறொரு சீரியல் நடிகருடன் சன் டிவி சீரியல் நடிகையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், எனக்கு விவாகரத்து ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது என்று பதிலடி கொடுத்துள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சன் டிவியின் கல்யாண பரிசு சீரியலில் மூலம் பிரபலமானவர் நடிகை நிவேதிதா. இந்த சீரியலில் வாசுகி என்ற கேரக்டரில் நடித்து வந்த இவர், அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக திருமகள் சீரியலில் பிரகதி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மகராசி சீரியல் நடிகர் எஸ்.எஸ்.ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நிவேதிதா.

இவர்கள் திருமணம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், கடந்த சில மாதங்களாக மலர் சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சுரேந்தருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், உங்களுக்கு தான் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை நிவேதிதா,எனக்கு விவாகரத்தாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இப்போது தான் நான் எனது காதலை கண்டுபிடித்துவிட்டேன். சிறப்பான ஒருவருடன் சேர்ந்து எனது வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த முயற்சிக்கிறேன். உங்கள் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். அதே சமயம் தயவு செய்து அநாகரிகமான கேள்விகள் கேட்பதை தவிர்க்கவும் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருமகள் சீரியலில் நிவேதிதா – சுரேந்தர் இருவரும் இணைந்து நடித்து வரும் நிலையில், இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. விரைவில் நிவேதிதா சுரேந்தரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sun Tv sun tv serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment