தமிழ் சீரியல் நடிகை நிவேதா பங்கஜ் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் சுரேந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது அவர், கர்ப்பமாக இருப்பதாக கூறி வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமார் தயாரித்து நடித்த வாணி ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பங்கஜ். தொடர்ந்து கல்யாண பரிசு, மகராசி, திருமகள், சுந்தரி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் பிரபலமானார். முதலில் துணை கேரக்டரில் நடித்து வந்த இவர், தற்போது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு மகராசி சீரியலில் நடிக்கும்போது தன்னுடன் இணைந்து நடித்த, நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிவேதா பங்கஜ், திருமணத்திற்கு பிறகு, சீரியலில் இருந்து விலகி குடும்பத்தை கவனிக்க தொடங்கியுள்ளார். ஆனால் சில மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கிய நிவேதா, ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும், வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
இதனிடையே தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் சுரேந்திரனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்த நிவேதாவுக்கு, ரசிகர்கள் பலரும், திருமணமான ஒருவர் இப்படி வேறொரு ஆணுடன் நெருக்கமாக இருக்கலாமா என்று கேள்வி எழுப்பினர். அப்போது நிவேதா, தனக்கு விவாகரத்து ஆகி 3 வருடங்கள் ஆகிவிட்டதாக கூறி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மகராசி சீரியலில் நடித்தபோது, சுரேந்தர் – நிவேதா இருவருக்கும் காதல் மலர்ந்தது.
தற்போது சுரேந்தர் மலர் சீரியலில் நடித்து வரும் நிலையில், நிவேதா – சுரேந்தர் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிவேதாவுக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.