தனக்கு விவாகரத்து ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது நான் விரும்பிய வாழ்க்கை இப்போது தான் எனக்கு அமைந்திருக்கிறது என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீரியல் நடிகர் ஒருவருடன் நடிகை நிவேதிதா வெளியிட்ட பதிவு கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது அந்த நடிகரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
சன் டிவியின் கல்யாண பரிசு சீரியலில் மூலம் பிரபலமானவர் நடிகை நிவேதிதா. இந்த சீரியலில் வாசுகி என்ற கேரக்டரில் நடித்து வந்த இவர், அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக திருமகள் சீரியலில் பிரகதி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மகராசி சீரியல் நடிகர் எஸ்.எஸ்.ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நிவேதிதா. இவர்கள் திருமணம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.
இதனிடையே கடந்த சில மாதங்களாக மலர் சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சுரேந்தருடன் நிதேவதிதா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு தான் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே என்று கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். அதற்கு விளக்கம் அளித்த நடிகை நிவேதிதா,எனக்கு விவாகரத்தாகி 3 ஆண்டுகள் ஆகிறது என்று கூறியிருந்தார்.
மேலும் இப்போது தான் நான் எனது காதலை கண்டுபிடித்துவிட்டேன். சிறப்பான ஒருவருடன் சேர்ந்து எனது வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த முயற்சிக்கிறேன். உங்கள் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். அதே சமயம் தயவு செய்து அநாகரிகமான கேள்விகள் கேட்பதை தவிர்க்கவும் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனிடையே தற்போது நடிகை நிவேதிதா நடிகர் சுரேந்தரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில, சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரையில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பலர் வாழ்க்கையில் இணைந்துள்ள பட்டியலில் தற்போது சுரேந்தர் – நிவேதிதா இணைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“