தனக்கு உடல்நிலை சரியில்லை விரைவில் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறேன் என்று சீரியல் நடிகை ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன்டிவியின் தெய்வமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. ஒரு கட்டத்தில் அந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்து விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வந்தார். இந்த இரு சீரியல்களுமே நிவிஷாவுக்கு பெரிய பிரபலத்தை கொடுக்காத நிலையில், சன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் நடித்திருந்தார்.
சின்னத்திரையில் தனக்காக அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த நிவிஷாவுக்கு மலர் சீரியல் அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது. சமூகவலை தளங்களில் அவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆனாலும், ஒரு கட்டத்தில் திடீரென நிவிஷா மலர் சீரியிலில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதற்கான காரணம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே சமூகவலைளதங்களில் ஆக்டீவாக இருக்கும் நிவிஷா, அவ்வப்போது போட்டோஷூட் நடித்தி தனது சமூகவலைத பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இவரின் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது நிவிஷா வெளியிட்டுள்ள பதிவு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், கடந்த சில தினங்களாக உடல்நல பாதிப்புடன் இருக்கிறேன். அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததேன். தற்போது மெல்ல குணமாகி வருகிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். நிவிஷாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.
மேலும் சீரியலில் நடிக்காத நிவிஷா புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வந்த நிலையில், உங்களை விரைவில் சீரியலில் நடிகையாக எதிர்பார்க்கிறோம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“