Serial Actress Pavithra Janani Viral Post :சின்னத்திரையில் ரசிகர்கள் சீரியல்கள் மட்டுமல்லாது சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுககும் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த வரவேற்பின் அடையாளமாக சின்னதிரையில் இருந்து நடிகர்கள் நடிகைகள் பலரும் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். இதற்கு முதல் அஸ்திவாரம் கொடுத்து என்றால் அந்த பெருமை விஜய் டிவியையே சாரும்.
ரசிகர்களின் ரசனைக்கேற்ப சீரியல் ரியாலிட்டி ஷோக்கள் என அடுத்தடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் விஜய் டிவியில ஒரு சீரியலில் நடித்தால் போதும் அடுத்து அவர்களுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு நிச்சயம் என்று கூறிவிடலாம். அந்த அளவிற்கு விஜய் டிவியின் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பழைய சீரியல்களை சுவாரஸ்யத்துடன் ஒளிபரப்பி வரும் விஜய் டிவி அவ்வப்போது புது சீரியலை களமிறக்கி வருகிறது.
அந்த வகையில் கடந்த கொரோனா தொற்றின் 2-வது அலை காலத்தில், புதியதாக எண்ட்ரி ஆன சீரியல் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியலின் ப்ரமோ வெளியானபோதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சையே தற்போது இந்த சீரியலில் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறலாம். இந்த சீரியலில் வரும் வினோத் பாபு, பவித்ரா ஜனனி ஆகியோர் நடித்து வருகின்றனர். இதில் ஹீரோ கோவிலில் வைத்து நாயகிக்கு கட்டாய தாலி கட்டுவது போல் காட்டப்பட்டது. இந்த ப்ரமோவை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீரியல் வரவேற்பை பெற்றுளளது.
விஜய் டிவியின் ஆஃபிஸ் சீரியலில் அறிமுகமாகி மெல்ல திறந்த கதவு, ராஜா ராணி, லக்ஷ்மி வந்தாச்சு சரவணன் மீனாட்சி ஈரமான ரோஜாவே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து புகழபெற்ற பவித்ரா ஜனனி, இந்த சீரியலில் துணிச்சல் மிக்க பெண்ணாக நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது பவித்ரா ஜனனி, தனது இன்ஸ்டாகிராம் ரீல்ஸில், தனது ஆண் நண்பரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். மீட் மை பாய் ப்ரண்ட் மிஸ்ட் ஷர்க் (Meet my boy frend Mr.Shrek) என்று பதிவிட்டுள்ள அவர் ஷர்க் லவ் (Shrek is love) என்ற எஃபெக்டை பயன்படுத்தி பொம்மை ஒன்றுடன் ரீல் செய்து உள்ளார். இந்த வித்தியாசமான மற்றும் வேடிக்கையான ரீலை பார்த்த அவரது ரசிகர்கள் ஜாலியாக பல கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil