விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. இதில், மலர்விழி வெற்றிவேல் வேடத்தில் நடித்தவர் பவித்ரா ஜனனி.
Advertisment
இந்த சீரியல் அவருக்கு, மிகப்பெரிய அளவில் புகழையும், ரசிகர்களையும் தேடித் தந்தது. தொடர்ந்து தற்போது பவித்ரா, தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அபிநயா என்னும் கேரக்டரில் நடிக்கிறார்.
Advertisment
Advertisements
காதலும் மோதலும் கலந்த இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் புகழ் வினோத்பாபு நடிக்கிறார். விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகும் இந்த சீரியல், அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அதேபோல் இந்த தொடரில் அபி, வெற்றியின் கெமிஸ்ட்ரி பார்க்க சூப்பராக இருக்கிறது.
குறிப்பாக சினிமாவுக்கு எந்த வகையிலும், குறையாமல் சீன்கள் இருப்பதால்’ ரசிகர்கள் இந்த சீரியலை மிகவும் பாராட்டி வருன்றனர். ஆனால் தற்போது அபி வெற்றி இருவரும் இரு துருவங்களாக இருந்து வருகின்றனர்.
இதனால் சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு இடையில் குழந்தை சுடர் ஒரு பாலமாக இருந்து வருகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பவித்ரா அடிக்கடி தனது புகைப்படங்கள், வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அபிநயா ஐஏஎஸ் என்று இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/