தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகை பவித்ரா ஜனனி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Advertisment
விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பவித்ரா ஜனனி. தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
Advertisment
Advertisements
தொடர்ந்து விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் முதன்மை கேரக்டரில் நடித்த பவித்ரா ஜனனி தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியல் மூலம் மீண்டும் நாயகியாக நடித்து வருகிறார்.
வினோத் பாபு நாயகனாக நடிக்கும் இந்த தொடரில் இவர்களுக்கு இடையில் நடக்கும் முட்டலும் மோதலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா ஜனனி அவ்வப்போது தனது புகைப்படம்மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.
அந்த வகையில் பவித்ரா ஜனனி சேலையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“