/indian-express-tamil/media/media_files/2025/02/08/86c1QCU30cOTw9Grcy0G.jpg)
விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பவித்ரா ஜனனி. மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பவித்ரா ஜனனி, விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் முதன்மை கேரக்டரில் நடித்திருந்தார்.
சமீபத்தில முடிவடைந்த விஜய் டிவியின் தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியல் மூலம் தனக்காக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் பவித்ரா ஜனனி, ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறிவிட்டார்.
தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் விறுவிறுப்பான திரைக்கதை, மற்றும் வினோத் பாபு, பவித்ரா ஜனனியின் நடிப்பை பிரபல நடிகை அனுஷ்கா பாராட்டியதாக இருவரும் மேடையில் தெரிவித்திருந்தனர். தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் முடிவுக்கு வந்தவுடன் அடுத்து எந்த சீரியலிலும் நடிக்காத பவித்ரா ஜனனி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் பங்கேற்றிருந்தார். பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்துகொண்ட விதம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இறுதிவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து 4-வது இடத்தை பிடித்திருந்தார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பவித்ரா ஜனனி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதே சமயம், பிக்பாஸ் முடிந்தவுடன், பவித்ரா எந்த சீரியலில் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது. ஆனால் தற்போது ரஞ்சனி தொடரில், பவித்ரா ஜனனி என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஞ்சனி சீரியல் படப்பிடிப்பிடிப்பு தளத்தில், தர்ஷனா, ஷயமந்தா, அஸ்வின், சந்தோஷ் ஆகியோருடன் பவித்ரா ஜனனி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதன் மூலம் பவித்ரா ஜனனி ரஞ்சனி சீரியலில் நடிக்க உள்ளாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், பவித்ராவின் தோழி, ஷயமந்தா ரஞ்சனி தொடரில் நடித்து வரும் நிலையில், அவரை பார்ப்பதற்காக, பவித்ரா அங்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், பவித்ரா மீண்டும் சின்னத்திரையில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.