Advertisment

விஜய் டி.வி சீரியல் தான் முக்கியம்... சன் டி.வி சீரியலில் இருந்து விலகிய நடிகை? காரணம் என்ன?

விஜய் டிவியின் எதார்த்தமான சீரியல் என்று பெயர் பெற்றது சிறகடிக்க ஆசை. வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Preethia Reddy

நடிகை ப்ரீத்தா ரெட்டி

ஒரே நேரத்தில் சன் டி.வி மற்றும் விஜய் டி.வி சீரியல்களில் நடித்து வந்த நடிகை தற்போது சிரமத்தின் காரணமாக சன் டி.வி சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

Advertisment

தமிழ் சின்னத்திரையில்,  சன் டி.வி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த இரு சேனல்களிலும், காலை முதல் நள்ளிரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் டி.ஆர்,பி ரேட்டிங்கில் இந்த இரு சேனல்களின் சீரியல்களும் தான் ஆக்கிரமித்து வருகின்றனர். இதன் காரணமாக சன்டிவி சீரியல் நடிகைகள் விஜய் டிவி சீரியல்களிலும், விஜய் டிவி சீரியல் நடிகைகள் சன்டிவி சீரியல்களிலும் பெரும்பாலும் நடிப்பதில்லை.

அதே சமயம் ஒரு சில நடிகைகள் இரு சேனல் தொடர்களிலும் நடித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை ப்ரீத்தா ரெட்டி, விஜய் டிவி மற்றும் சன்டிவி சீரியல் என ஒரே நேரத்தில் நடித்து வந்தார். விஜய் டிவியின் எதார்த்தமான சீரியல் என்று பெயர் பெற்றது சிறகடிக்க ஆசை. வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்திய எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீரயிலில், சுருதி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ப்ரீத்தா ரெட்டி. எதைப்பற்றியும் யோசிக்காமல், தன் மனதில் பட்டதை பேசிவருவதால் சுருதி கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சிறகடிக்க ஆசை மட்டுமல்லாமல், ப்ரீத்தா ரெட்டி சன்டிவியின் இனியா சீரியலிலும் நடித்து வந்தார். இதில் அக்ஷையா என்ற கேரக்டரில் நாயகனின் தங்கையாக நடித்து வந்த ப்ரீத்தா ரெட்டி தற்போது இனியா சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

ஒரே நேரத்தில் 2 சேனல் சீரியல்களிலும் நடிப்பது சிரமமாக இருப்பதால், இனியா சீரியலில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. சிறகடிக்க ஆசை சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சுருதி கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இதன் காரணமாக அவர் இனியா சீரியலில் இருந்து விலகியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment