Advertisment

ரவுடி பேபியாக மாறிய ப்ரீத்தி சர்மா... கந்தசாமி பாடலுக்கு செம டான்ஸ்

Tamil Serial Update : தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ப்ரீத்தி சர்மா ரசிகர்கள் மத்தியில் சித்தி 2 சீரியலின் வெண்பாவாகவே மாறிவிட்டார்.

author-image
WebDesk
New Update
ரவுடி பேபியாக மாறிய ப்ரீத்தி சர்மா... கந்தசாமி பாடலுக்கு செம டான்ஸ்

Actress Preethi Sharma Viral Dance : சன்டியின் சித்தி 2 சீரியல் மூலம் பிரபலமான நடிகை ப்ரீத்தி சர்மா கந்தசாமி படத்தின் பாடலுக்கு நடனமாடிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisment

வட இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி சர்மா. கடந்த 2018-ம் ஆண்டு கலர்ஸ் தமிழின் ஒரு கதை பாடட்டுமா சார் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், தொடர்ந்து சித்து ஸ்ரேயா லீடு ரோலில் நடித்த திருமணம் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ப்ரீத்தி சர்மா, தொடர்ந்து சன்டிவியின் சித்தி 2 சீரியலில் லீடு ரோலில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த சீரியலில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ப்ரீத்தி சர்மா ரசிகர்கள் மத்தியில் சித்தி 2 சீரியலின் வெண்பாவாகவே மாறிவிட்டார்.  மேலும் வெண்பா கவின் இடையேயான ரொமான்ஸ் கட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ப்ரீத்தி சர்மா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி இவரின் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான கந்தாசாமி படத்தில், இடம்பெற்றுள்ள எஸ்கியூஸ்மி மிஸ்டர் கந்தசாமி பாடலுக்கு பரீத்தி சர்மா நடனமாடியுள்ளார். சீரியலில் ப்ரீத்தி சர்மாவை சேலையடன் பார்த்து பழகிய ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து ஆச்சரியமைடைந்து வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இவரை ரவுடி பேபி என்று பாராட்டி வருகினறனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment