Advertisment

இந்த நிகழ்ச்சி பாத்தப்ப கூட இவ்ளோ சிரிப்பு வரல... ப்ரீத்தி சர்மாவின் லேட்டஸ்ட் வீடியோ

வெண்பா கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்த்து வருபவர் ப்ரீத்தி சர்மா. நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூகலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார் ப்ரீத்தி சர்மா

author-image
WebDesk
Jul 02, 2022 18:09 IST
இந்த நிகழ்ச்சி பாத்தப்ப கூட இவ்ளோ சிரிப்பு வரல... ப்ரீத்தி சர்மாவின் லேட்டஸ்ட் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் நடிகைகள் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சித்தி 2 சீரியல் நடிகை வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சன்டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று சித்தி 2. நடிகை ராதா சரத்குமார் லீடு ரோலில் நடித்து வந்த இந்த சீரியல் 90-கிட்களில் பேவரெட் சீரியலான சித்தியின் 2-ம் பாகமாக உருவானது. ஆனால் சீரியல் தொடங்கியதில் இருந்தே இதில் நடிகர் நடிகைகள் மாற்றம் நடந்துகொண்டே இருந்தது.

ஆனாலும் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் நடிகை ராதிகாவே இந்த சீரியலில் இருந்து விலகினார். அதன்பிறகு சீரியல் நிறுத்தபப்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெண்பா - கவின் இருவரும் சீரியலை தூக்கி நிறுத்தியுள்ளனர். சித்தி 2 சீரியல தற்போது சன் டி.வியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இதில் வெண்பா கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்த்து வருபவர் ப்ரீத்தி சர்மா. நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூகலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ப்ரீத்தி சர்மா அதிகமான டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் என்றாலும் கூட தமிழ் பாடலுக்கு சரியாக லிப் சிங் செய்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், சொல்தெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒரு பெண் பேசும் ஆடியோவுக்கு டப்ஸ்மாஷ் செய்துள்ளார். தான் படித்திருப்பதால் தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அனைத்தையும் சொல்லித்தருவதாக கூறும் அந்த பெண்ணிடம் என்ன படத்திருக்கிறாய் என்று கேட்கும்போது 5-வது என்று சொல்கிறார்.

இந்த வீடியோவுக்கு அழகாக லிப் சிங் செய்து வெளியிட்டு ப்ரீத்தி சர்மா தனது அண்ணன் ஒருவருடன் சேர்ந்து செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

#Preethi Sharma #Chithi 2 Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment