New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/03/Preethi-Sharma.jpg)
வெண்பா கவின் இடையேயான ரொமான்ஸ் கட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது
சன்டியின் சித்தி 2 சீரியல் மூலம் பிரபலமான நடிகை ப்ரீத்தி சர்மா தற்போது வெளியிட்டுள்ள மாடலிங் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது
வட இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி சர்மா. கடந்த 2018-ம் ஆண்டு கலர்ஸ் தமிழின் ஒரு கதை பாடட்டுமா சார் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், தொடர்ந்து திருமணம் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து சன்டிவியின் சித்தி 2 சீரியலில் லீடு ரோலில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த சீரியலில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ப்ரீத்தி சர்மா ரசிகர்கள் மத்தியில் சித்தி 2 சீரியலின் வெண்பாவாகவே மாறிவிட்டார்.
மேலும் வெண்பா கவின் இடையேயான ரொமான்ஸ் கட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ப்ரீத்தி சர்மா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அதன்படி இவரின் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது வழக்கமான ஒன்று. இதில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சேலை விளம்பரமாக வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் ப்ளு நிறத்தில் சேலை அதற்கு மேச்சாக ரெட் நிறத்தில் பிளவுஸ் என ட்ரெண்டிங் ஆகும் வகையில் அணிந்திருக்கும் நகைகள் பற்றி ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.