சித்தி 2 சீரியல் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ப்ரீத்தி சர்மா தற்போது மலர் என்ற புதிய சீரியல் மூலம் சன் டி.வியில் மீண்டும் ரீ-என்டரி கொடுக்க உள்ளார்.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில பரபரப்பை ஏற்படுத்துவதில் சன்டிவி சீரியலுக்கு முக்கிய இடம் உண்டு. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. இதை தக்க வைத்துக்கொள்ள சன.டிவி அவ்வப்போது புதிய சீரியலையும் களமிறக்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது புதிதாக களமிறங்க உள்ள சீரியல் மலர். சித்தி 2 சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்த ப்ரீத்தி சர்மா இந்த சீரியலின் நாயகியாக நடித்துள்ளார். அக்கா தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்த சீரியலின் திரைக்கதை அமைக்கப்பட்டுளளதாக ப்ரமோவில் காட்டப்பட்டுள்ளது. இந்த சீரியலில் ப்ரீத்தி ஷர்மா மற்றும் இந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் நிவிஷா, அக்னி மற்றும் ரெஜினா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ள இந்த சீரியல், மலையாள தொலைக்காட்சி தொடரான சாந்த்வானத்தின் ரீமேக் ஆகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த சீரியலின் ப்ரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கலர்ஸ் தமிழில் திருமணம் சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி ஆன ப்ரீத்தி சர்மா அதனைத் தொடர்ந்து சித்தி 2 சீரியல்ல முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்தி 2 சீரியல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், ப்ரீத்தி சர்மா அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தற்போது மலர் சீரியல் மூலம் ப்ரீத்தி சர்மா மீண்டும் சன்.டிவி சீரியலில் ரீ-என்டரி கொடுத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil