Actress Priyaraman In Senthurapoove Serial : விஜய் டிவியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செந்தூரப்பூவே. நடிகர் ரஞ்சித் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மனைவியை இழந்த இரு பெண் குழந்தைகளின் தகப்பன் அம்மா மற்றும் தங்கையின் வற்புறுத்தலால் 2-வது திருமணம் செய்துகொள்கிறார். அதன்பிறகு அவர் வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்களே இந்த சீரியலின் முழு கதை.
தற்போது சீரியல் ஒளிபரப்பாகும் முன்னரே அன்றைய எபிசோடு குறித்து ப்ரமோ வெளியிடப்படுகிறது. இந்த ப்ரமோவை பார்க்கும் ரசிகர்கள் அதை வைத்தே இன்றைய எபிசோடு போர் அடிக்குமா அல்லது விறுவிறுப்பாக செல்லுமா என்பதை கணித்து விடுகின்றனர். அதிலும் விஜய்டிவி ஒரு சீரியலுக்கு அதிக ப்ரமோக்களை வெளியிட்டு பாதி எபிசோடுகளை ப்ரமோவிலே பார்க்கும் அளவுக்கு செய்துவிடுகின்றனர்.
அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு செந்துரப்பூவே சீரியலின் ப்ரமோ வெளியிடப்பட்டது. அதில் ரஞ்சித்த கதாப்பாத்திரத்தின் முதல் மனைவி என்ற பெயரில் ஒரு ஓவியம் வரையப்பட்டு அந்த ஓவியத்தை ரஞ்சித் திறந்து ஷாக் ஆவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இது ஷாக் ரஞ்சித்திற்கு மட்டுமல்ல ரசிகர்களான நமக்கும்தான். ஏனென்றால் அந்த ஓவியத்தில் இருந்தவர் ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலின் அகிலாண்டேஸ்வரியாக வரும் நடிகை பிரியா ராமன். இவர் நடிகர் ரஞ்சித்தின் மனைவியும் கூட.
இந்த ப்ரமோ வெளியானது முதலே கணவர் சீரியலில் மனைவியா என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கினர். தொடர்ந்து இந்த சீரியலில் அடுத்த ப்ரமோ வெளியானது. இதில் ரஞ்சித்திற்கு ஷாக் கொடுக்காமல் இயக்குநர் ரசிகர்களான நமக்கு ஷாக் கொடுத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த ப்ரமோவில் ஓவியத்தில் வந்த பிரியா ராமன் இந்த ப்ரமோவில் நிஜத்தில் வந்து ஷாக் கொடுத்துள்ளார். நாயகன் ரஞ்சித் கோயிலுக்கு வர, அந்த நேரத்தில் அங்கு நான்கைந்து ரௌடிகள் நடிகை பிரியாராமனிடம் வம்பு செய்ய, அந்த ரௌடிகளை கோவிலுக்குள்ளே வைத்து பந்தாடுகிறார் ரஞ்சித்
கடந்த சில ஆண்டுகளாக நிஜ வாழ்கையில் இருந்து பிரிந்திரந்த இந்த ஜோடி சமீபத்தில் திருமண நாளில் மீண்டும் இணைந்தனர். அதற்குள் இப்படி கணவருடன் சீரியலிலும் இணைந்துள்ளார். இவர்இங்கு வந்துவிட்டால், செம்பருத்தி சீரியலின் நிலைமை என்ன? என்று அடுக்கடுக்கான பல கேள்விகள் உதித்தது. ஆனால் இந்த கேள்விகள் அனைத்திற்கும் விஜய் டிவி சிம்பிளா ஒரு பதில் சொன்னாங்க... அது என்னானா "'செந்தூரப் பூவே' தொடர்ல பிரியா ராமன் சிறப்பு தோற்றத்துல தான் நடிக்கராங்க அந்த பிளாஷ்பேக் போஷன்க்கு மட்டும் தான் சில நாள் தேதி கொடுத்து நடிச்சுக் கொடுத்துட்டுப் போனாங்க, அவ்ளோதான். மத்தபடி 'செந்தூரப் பூவே' சீரியல்ல எந்த மாற்றமும் இல்லை" என சொல்லிவிட்டார்கள்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil