Advertisment

வீட்டுக்குள்ளே பார் செட்டப்... பிரபல சீரியல் நடிகையின் ஹோம் டூர் வைரல்

சின்னத்திரை நடிகை பிரியா பிரின்ஸ் தனது வீட்டில் பார் செட்டப் வைத்துள்ளதாக கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
வீட்டுக்குள்ளே பார் செட்டப்... பிரபல சீரியல் நடிகையின் ஹோம் டூர் வைரல்

தற்போதைய காலகட்டத்தில் சினிமா நடிகைகளை விடவும் சீரியல் நடிகைகள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே போல சின்னத்திரை நிகழச்சிகள மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். இதில் அவர்கள் அவ்வப்போது வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

அந்த வகையில் தற்போது தனது வீடு எப்படி இருக்கிறது என்பது தொடர்க வீடியோ வெளியிட்டுள்ள சின்னத்திரை நடிகை பிரியா பிரின்ஸ் தனது வீட்டில் பார் செட்டப் வைத்துள்ளதாக கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சன். டி.வி.யின் முக்கிய சீரியல்களில் ஒன்று கண்ணான கண்ணே. அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்த இந்த சீரியலில் நிமிஷிகா மகளாகவும், பப்லு ப்ரித்விராஜ் அப்பாவாகவும் நடித்து வருகின்றனர். ராகுல் ரவி நிமிஷிகாவின் கணவராக நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல். டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது.

இந்த சீரியலில் வில்லி மேனகா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை பிரியா பிரின்ஸ். செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையாக உயர்ந்துள்ள இவர், தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பிரியா அவ்வப்போது பியூட்டி டிப்ஸ் உள்ளிட்ட பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது தான் புதிதாக வாங்கியுள்ள வீடு தொடர்பான வீடியோ பதிவை தனது யூடியூப சேனலில் வெளியிட்டுள்ளார். டெல்லியில் இருந்து ஷேர் ஆர்டர் செய்து வாங்கியுள்ளதாக கூறப்படும் இந்த வீட்டில் சமையலறைக்கு அருகில் பைவ் ஸ்டார் ஹோட்டல் ஸ்டைலில் பார் செட்டப் ஒன்றை அமைத்துள்ளார்.

மேலும் இந்த வீட்டை மிகவும் கஷ்டப்பட்டு வாங்கியதாக கூறியுள்ள அவர், வீட்டை ஒருநாள் ஷூட்டிங்கிற்காக விட விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில் வீட்டிற்கு உள்ளே பார் செட்டப்பா என்று ரசிகர்கள் ஆச்சரியமடைந்து வருகின்றனர்.    

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kannana Kanne Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment