கணவர் சீரியலில் மனைவி எண்ட்ரி : ரசிகர்களுக்கு பெரிய ஷாக் தான்

Senthurapoove Serial Update Tamil : நடிகர் ரஞ்சித்தின் செந்தூரப்பூவே சீரியலில் அவரது மனைவி பிரியாராமன் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

Actress Priyaraman Entry In Senthurapoove Serial : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மற்ற  தெலைக்காட்சி சீரியல்களை காட்டிலும் விஜய் டிவி சீரியல்கள் மக்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்று வருகிறன்றனர். மக்கள் பொழுதுபோக்கின் முக்கிய ஆதாரமாக இருக்கும் இந்த சீரியல்களில் நாள்தோறும் பல திருப்பங்கள் ஏற்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வருகிறது.

காமெடி, காதல், பகை, துரோகம், செண்டிமென்ட் என அனைத்தையும் கலந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல்கள் முக்கியமாக இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில், விஜய் டிவியின் பிரபலமான சீரியல்களில் ஒன்று செந்தூராபூவே. நடிகர் ரஞ்சித் முக்கிய கதாப்பாத்திரத்தில்  நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நாள்தோறும் புதுப்புது திருப்பங்களுன் ஒளிபரப்பாகி வருகிறது.

துரைசிங்கம் மனைவியை இழந்த ஒரு பணக்காரர். அவருக்கு கனி மற்றும் கயல் என்ற 2 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி அருணா, இரண்டாவது குழந்தை கயல் பிறக்கும்போது இறந்துவிடுகிறார். அதன்பிறகு தனது குடும்பத்துடன் வசிக்கும் துரைசிங்கம் தனது தாய் மற்றும் சகோதரி கட்டாயத்தின் பேரில், ரோஜாவை மறுமணம் செய்துகொள்கிறார். இதில் ரோஜாவின் கணவர் இறந்துவிடுகிறார், ஆனால் இந்த உண்மை துரைசிங்கத்தின் குடும்பத்திற்கு தெரியாத நிலையில், துரைசிங்கம் இதனை தெரிந்துகொள்கிறார்.

இந்நிலையில், தற்போது இந்த சீரியலில் புதிதாக நடிகை பிரியா ராமன் இணைந்துள்ளார். துரைசிங்கமாக நடித்து வரும் நடிகர் ரஞ்சித்தின் மனைவியான பிரியா ராமன் இந்த சீரியலில், துரைசிங்கத்தின் மணைவி அருணாவாக வருகிறார். இது தொடர்பான ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் குழந்தை கயல் தனது அம்மாவை பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறது. அப்போது ரோஜா அனைவரையும் ஒரு அறைக்கு கூட்டிச்சென்று ஒரு புகைப்படத்தை திறக்க சொல்கிறார்.

அதில் பிரியாராமனின் புகைப்படம் வரையப்பட்டுள்ளது. குழந்தை கயலிடம் இது தான் அம்மா என்று கூறுகின்றனர். தற்போது இந்த ப்ரமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress priya raman entry to her husband serial senthoora poove

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com