இயக்குனர் பாரதிராஜாவின் உதவியாளராக சினிமாவில் நுழைந்த பாக்யராஜ் 1979-ம் ஆண்டு வெளியான சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இயக்கம் நடிப்பு என பட்டையை கிளப்பிய பாக்யராஜ் தொடர்ந்து தான் இயக்கும் படங்களில் ஹீரோவாகவே நடித்து வந்தார்.
Advertisment
அந்த வகையில் இவர் இயக்கிய விடியும் வரை காத்திரு, மௌன கீதங்கள், சின்ன வீடு, தாவணி கனவுகள், முந்தானை முடிச்சு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களாக அமைந்தது. அதிலும் இந்திய அளவில் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்த பாக்யராஜ் தான் இயக்கிய பல படங்களில் நடுத்தர மற்றும் அடிமட்டத்தில் உள்ள குடும்பத்தின் முக்கிய பிரச்சனைகள் பற்றி கதையை கையில் எடுத்திருப்பார்.
அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான பொய் சாட்சி, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு உள்ளிட்ட பல படங்களை கொடுத்துள்ள பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்க அப்போதைய ஹீரோக்கள் பலரும் காத்திருந்த வரலாறும் உண்டு. அந்த வகையில் பாக்யராஜ் இயக்கத்தில் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த படம் தாவணி கனவுகள். 5 தங்கைகளுக்கு அண்ணனாக இருக்கும் ஒருவரின் வாழ்க்கை போராட்டம் தான் இந்த படம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில், சிவாஜி முதல் பாக்யராஜ் வரை அனைவரையும் தனது பேச்சால் கலாய்க்கும் கேரக்டரில் ஒரு சிறுமி நடித்திருந்தார். பாக்யாராஜூன் கடைசி தங்கையான இவர், தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் பிரியதர்ஷினி நீலகண்டன். சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இது குறித்து பாக்யராஜ் ஒரு பேட்டியில் கூறியபோது, அந்த சிறுமிக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் பூர்ணிமா பாக்யராஜ். ஒரு படத்தில் துணை கேரக்டரில் நடித்து வந்த பிரியதர்ஷினி நடிப்பை பார்த்து ஆச்சரியடைந்த பூர்ணிமா பாக்யராஜ் தாவணி கனவுகள் படத்திற்கு இவர் சரியாக இருப்பார் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“