/tamil-ie/media/media_files/uploads/2021/07/Priyanka.jpg)
Roja Serial Actress Priyanka Viral Video : சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் ரோஜா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் பிரியங்கா நல்காரி. தமிழில் ஓரிரு படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ள இவர் ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அவரது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் பிரியங்காவின் இன்ஸ்டாகிராம் பக்கம் கிட்டத்தட்ட 5 லட்சம் ஃபாலோவர்களை கடக்க உள்ளது. ரோஜா சீரியலில், ஹேம்லி லுக்கில ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமான இவர், இந்த சீரியலில், நாயகன் அர்ஜூனுடன் செய்யும் ரொமான்ஸ் கட்சிகளே இந்த சீரியல் வெற்றிக்குக்கு முக்கிய காரணமாக சொல்லலாம். ஆனால் தற்போது இவர் ஹோம்லி அல்ல மார்டன் உடையும் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சீரியலில் ரொமான்ஸ் செய்தாலும் நிஜ வாழ்க்கையில் சிங்கிள் தான் என அவரே இன்ஸ்டாகிராமில் தெரிவித்து உள்ளார். மேலும் தனியாக இருப்பது மகிழ்ச்சியாகவும சுதந்திரமாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ("Happiness is being young, free and Single"). இந்நிலையில், தற்போது ஒரு மலைப்பிரதேசத்தில் சுற்றுலா சென்றுள்ள பிரியங்கா, வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோ பதிவில் மார்டன் உடை அணிந்துள்ள அவர், கவர்ச்சியாக நடனமும் ஆடியுள்ளார். ஏற்கனவே தான் சிங்கிள் என அவர் கூறி இருந்த நிலையில் தனது soul mate க்காக காத்திருப்பதாக அவர் கூறி உள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில் "I love to travel..waiting for my travel partner(my soul)…" என அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.