தமிழ் சின்னத்திரையின் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வரும் பிரியங்கா நல்காரி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது திருமண புகைப்படங்களை நீக்கிய நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டையே டெலிட் செய்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான "ரோஜா" என்ற ஹிட் சீரியலில் நடித்து புகழ்பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தார். இந்த சீரியலில் இவர் நடித்த ரோஜா கேரக்டரே இவரின் அடையாளமாகவும் மாறியது. இந்த சீரியல் கடந்த 2022-ல் முடிவடைந்த நிலையில், பிரியங்கா அடுத்து ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் நாயகியாக நடித்து வந்தார்.
இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஆனாலும் ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரியங்கா, கடந்த ஆண்டு மார்ச் மாதம் மலேசியாவில் உள்ள ஒரு கோவிலில், பிரியங்கா தனது காதலவர் தொழிலதிபர் ராகுல் வர்மாவை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
திருமணத்திற்கு பின் மலேசியாவில் குடியேறிய பிரியங்கா, இனி சீரியலில் நடிக்க மாட்டார் என்று தகவல் வெளியாக நிலையில்,எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "நள தமயந்தி" என்ற தமிழ் சீரியலின் மூலம் பிரியங்கா மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கினார். அதே சமயம் சமூகவலைதளங்களில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவியது.
இதனிடையே தற்போது பிரியங்கா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் நீக்கியிருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டையே பிரியங்கா டெலிட் செய்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 7 லட்சம் ஃபாலோயர்கள் இருந்த நிலையில், தற்போது பிரியங்காவின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டெலிட் செய்துவிடுவதாகவும், ப்ரமோஷனுக்காக தனது ரசிகர்கள் அனுப்பிய பொருட்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பிவிடுவதாகவும் தெரிவித்துள்ள,பிரியங்கா தனக்கு ஆதரவு அளித்த அளைவருக்கும் நன்றி என்றும் பதிவிட்டிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“