ஜீ தமிழின் நளதமயந்தி என்ற சீரியலில் நடித்து வரும் நடிகை பிரியங்கா நல்காரி, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கணவரின் புகைப்படங்களை நீக்கியுள்ளது அவர் கணவரை பிரிந்துவிட்டாரா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பான "ரோஜா" என்ற ஹிட் சீரியலில் நடித்து புகழ்பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தார். இந்த சீரியலில் இவர் நடித்த ரோஜா கேரக்டரே இவரின் அடையாளமாகவும் மாறியது. இந்த சீரியல் கடந்த 2022-ல் முடிவடைந்த நிலையில், பிரியங்கா அடுத்து ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் நாயகியாக நடித்து வந்தார்.
இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஆனாலும் ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரியங்கா, கடந்த ஆண்டு மார்ச் மாதம் மலேசியாவில் உள்ள ஒரு கோவிலில், பிரியங்கா தனது காதலவர் தொழிலதிபர் ராகுல் வர்மாவை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
திருமணத்திற்கு பின் மலேசியாவில் குடியேறிய பிரியங்கா, இனி சீரியலில் நடிக்க மாட்டார் என்று தகவல் வெளியாக நிலையில்,எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "நள தமயந்தி" என்ற தமிழ் சீரியலின் மூலம் பிரியங்கா மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கினார். அதே சமயம் சமூகவலைதளங்களில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவியது.
இதனிடையே தற்போது பிரியங்கா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார். இதனால் பிரியங்கா தனது திருமணத்தை முறித்துக்கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சமீபத்தில் இன்ஸ்டா லைவ்வில் வந்த பிரியங்காவிடம் ஒரு ரசிகர் நீங்கள் சிங்கிளா என்று கேட்டபோது, அதற்கு ஆம் என்று பதில் அளித்துள்ளார்.
இதன் மூலம் பிரியஙாக் தனது கணவர் ராகுலை பிரிந்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“