சன் டி.வி.யின் ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்காரி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
கடந்த 2010-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அந்தாரி பந்துவையாக என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரியங்கா நல்காரி. தொடர்ந்து 2014-ம் ஆண்டு தெலுங்கில், மகமாலா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
Advertisment
Advertisements
தொடர்ந்து தெலுங்கில் சில சீரியல்களில் நடித்து வந்த பிரியங்கா நல்காரி, தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு சன் டி.வியில் தொடங்கிய ரோஜா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார்.
இதன் மூலம் இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிரியங்கா தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இந்த சீரியல் மூலம் பிரியங்கா என்ற இவரது உண்மையான பெயர் மறந்து பலரும் இவரை ரோஜா என்றே அழைக்கின்றனர். அந்த அளவிற்கு ரோஜா கேரக்டருக்கு பிரியங்கா உயிர் கொடுத்துள்ளார்.
சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்ளகில் ஆக்டீவாக இருக்கும் இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கருப்பு நிற சேலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சன்டிவியின் பெரிய ஹிட் சீரியலான ரோஜா சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில், பிரியங்கா அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil