வித்தியாசமான போஸ்... ஆனா அந்த வளையல்தான் ஹைலைட் ... ரோஜா போட்டோஸ்

Tamil Serial Update : சமீபத்தில் இவர் வெளியிட்ட சோலோ டூர் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது

Tamil Serial Update : சமீபத்தில் இவர் வெளியிட்ட சோலோ டூர் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது

author-image
WebDesk
New Update
திருமண கோலத்தில் ரோஜா நடிகை... பிரியங்கா வீட்டில் நடந்த பெரிய விசேஷம்

Roja Serial actress Priyanka Nalgari Photo Gallery : கடந்த 2010-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அந்தாரி பந்துவையாக என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரியங்கா நல்காரி. தொடர்ந்து ஒரு சில தெலுங்கு படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இவர், தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யனும் குமாரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

Advertisment
publive-image

அதன்பிறகு 2019-ம் ஆண்டு காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பே 2014-ம் ஆண்டு தெலுங்கில், மகமாலா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடி வைத்த பிரியங்கா நல்காரி, தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தார்.

தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு சன் டி.வியில் தொடங்கிய ரோஜா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இதன் மூலம் இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிரியங்கா தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

Advertisment
Advertisements
publive-image

இந்த சீரியல் மூலம் பிரியங்கா என்ற இவரது உண்மையான பெயர் மறந்து பலரும் இவரை ரோஜா என்றே அழைக்கின்றனர். அந்த அளவிற்கு ரோஜா கேரக்டருக்கு பிரியங்கா உயிர் கொடுத்துள்ளார். சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்ளகில் ஆக்டீவாக இருக்கும் இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட சோலோ டூர் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில், தற்போது புதிய போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். கருமை நிற உடையில் இருக்கும் பிரியங்கா ட்ரெஸ்க்கு மேட்ச்சாக கருமை நிற வளையல் அணிந்துள்ளார். குறிப்பாக அந்த வளையலில் ரோஜா என்று எழுதப்பட்டுள்ளது.

publive-image

பிரியங்கா என்ற பெயர் மாறி அனைவரும் ரோஜா என்று அழைத்து வரும் நிலையில், அவருக்கும் இந்த பெயர் மாற்றம் மிகவும் பிடித்துள்ளது போல என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Priyanka Nalkari Roja Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: