ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் நடித்து வந்த நடிகை பிரியங்கா நல்காரி திருமணத்திற்கு பிறகு திடீரென சீரியலில் இருந்து விலகிய நிலையில், தற்போது அவர் தனது கணவருடன் இணைந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
சன்டிவியின் ரோஜா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா நல்காரி. ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த பிரியங்காவுக்கு ரோஜா சீரியல் பெரிய அறிமுகத்தை கொடுத்தது.
Advertisment
Advertisements
இந்த சீரியல் அவரின் உண்மையாக பெயர் மறைந்து அனைவரும் ரோஜா என்று அழைக்கும் அளவுக்கு பிரியங்கா பிரபலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோஜா சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், பிரியங்கா அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலில் நாயகியாக நடித்து வந்தார். இந்த சீரியல் மற்ற சீரியல்களின் சாயலில் இருப்பதாக கூறி வந்தாலும் டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த சீரியலில் நடித்து வரும்போது தனது நீண்டநாள் காதலரை கடந்த மார்ச் 23-ந் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் அவ்வப்போது தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். இதனிடையே பிரியங்கா தற்போது நடித்து வரும் சீதாராமன் சீரியலில் இருந்து சமீபத்தில் தான் விலகுவதாக அறிவித்தார்.
அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருமணமாகிவிட்டதால் கணவருடன் இருப்பதற்காக தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இனி இவர்தான் என் ஹீரோ என்பதை போல் பிரியங்கா நல்காரி தனது கணவருடன் இணைந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“