ஜீ தமிழின் சீதாராமன் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அந்தாரி பந்துவையாக என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரியங்கா நல்காரி.
Advertisment
2014-ம் ஆண்டு தெலுங்கில், மகமாலா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடி வைத்த பிரியங்கா நல்காரி, தெலுங்கிலும் ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தார்.
இதனையடுத்து தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு சன் டி.வியில் தொடங்கிய ரோஜா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார்.
இதன் மூலம் இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிரியங்கா தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இந்த சீரியல் மூலம் பிரியங்கா என்ற இவரது உண்மையான பெயர் மறந்து பலரும் இவரை ரோஜா என்றே அழைக்கின்றனர். அந்த அளவிற்கு ரோஜா கேரக்டருக்கு பிரியங்கா உயிர் கொடுத்துள்ளார்.
சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்ளகில் ஆக்டீவாக இருக்கும் இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“