தமயந்தியாக ரீ-என்டரி... மீண்டும் ஜீ தமிழ் சீரியலில் பிரியங்கா நல்காரி

சீதாராமன் சீரியலில் இருந்து விலகிய பிரியங்கா நல்காரி தற்போது புதிய சீரியல் மூலம் ரீ-என்டரி கொடுத்துள்ளார்

சீதாராமன் சீரியலில் இருந்து விலகிய பிரியங்கா நல்காரி தற்போது புதிய சீரியல் மூலம் ரீ-என்டரி கொடுத்துள்ளார்

author-image
WebDesk
New Update
Priyanka Nalkari

சின்னத்திரையில் பிரியங்கா நல்காரி ரீ-என்டரி

சின்னத்திரையின் முன்னணி சீரியல் நடிகையாக இருந்தவர் பிரியங்கா நல்காரி. தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது சன் டிவியின் ரோஜா சீரியல். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அர்ஜூன் – ரோஜா இடையேயான ரொமான்ஸ் காட்சிக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.

Advertisment

ஒரு கட்டத்தில் ரோஜா சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், இதில் அர்ஜூனாக நடித்து வந்த சுப்பு சூரியன் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்க தொடங்கிய நிலையில், பிரியங்கா நல்காரி ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் நடிக்க தொடங்கினார். நல்ல டிஆர்பி ரேட்டிங்குடன் ரசிகர்கள் மத்தியில் சீதாராமன் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், திடீரென தனது காதலரை திருமணம் செய்துகொண்ட பிரியங்கா சீரியலில் இருந்து விலகினார்.

அவரது விலகல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில், கணவருடன் நேரத்தை செலவிட விரும்புவதால் சீரியலில் இருந்து விலகுவதாக கூறப்பட்ட நிலையில், கணவர் சீரியலில் நடிக்க வேண்டாம் என்று கூறியதால் விலகிவிட்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் இனி பிரியங்கா சீரியலில் நடிக்க மாட்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது பிரியங்கா சீரியலில் ரீ-என்டரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Priyanka Nalkari2

Advertisment
Advertisements

சன் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு மாறிய பிரியங்கா நல்காரி தற்போது ஜீ தமிழ் சீரியல் மூலமே தனது 2-வது இன்னிங்சை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி சேனல்களுக்கு இணையாக அவ்வப்போது புதிய சீரியலை களமிறக்கி வரும் ஜீ தமிழில் அடுத்து நளதமயந்தி என்ற புது சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாகவும், இந்த சீரியலில் நாயகியாக நடிக்க பிரியங்கா நல்காரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலுக்காக  பிரியங்கா போட்டோஷூட்டில் பங்கேற்ற நிலையில் அந்த போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.  இந்த சீரியல் தொடர்பான அறிவிப்பு மற்றும் ப்ரமோ வீடியோக்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்ப்படும் நிலையில், பிரியங்காவின் ரீ-என்டரி அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

New Serial Zee Tamil Priyanka Nalkari

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: