New Update
/indian-express-tamil/media/media_files/4NdELHQOazxjau4zQOET.jpg)
பிரியங்கா நல்காரி ரீசன்ட் போட்டோஸ்
ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலுமத் சன்டிவின் ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரியங்கா நல்காரி ரீசன்ட் போட்டோஸ்
தமிழ் சின்னத்திரையின் முன்னணி சீரியல் நடிகையாக இருந்த பிரியங்கா நல்காரி தற்போது சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அப்படியேதான் உள்ளது.
சன் டி.வி.யின் ரோஜா சீரியல் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. தெலுங்கில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையாக என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.
தொடர்ந்து 2014-ம் ஆண்டு தெலுங்கில், மகமாலா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாக பிரியங்கா நல்காரி, தெலுங்கிலும் ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தார்.
இதனையடுத்து தமிழில் காஞ்சனா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு சன் டி.வியில் தொடங்கிய ரோஜா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார்.
இந்த சீரியல் அவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்த நிலையில், பிரியங்கா என்ற அவரது உண்மையான பெயர் மறந்து பலரும் இவரை ரோஜா என்றே அழைக்கின்றனர்.
அந்த அளவிற்கு ரோஜா கேரக்டருக்கு பிரியங்கா உயிர் கொடுத்துள்ளார். சமீபத்தில் அந்த சீரியல் முடிவடைந்த நிலையில், பிரியங்கா அடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலில் நடித்து வந்தார்.
சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட பிரியங்கா நல்காரி சீதாராமன் சீரியலில் இருந்து விலகியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இருக்கும் பிரியங்கா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.