சன்டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்கும் முக்கிய சீரியலான ரோஜா சீரியலில் முதன்மை கேரக்டரில் நடித்து வரும் பிரியங்கா நல்காரி தற்போது சோலோ டூர் சென்றது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியில் ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ள சீரியல் ரோஜா. சன் டி.வியின் ப்ரைம் டைம் சீரியலான இதில் பிரியங்கா நல்காரி, சுப்பு சூரியன், வடிவுக்கரசி, ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகினறனர். இதில் அர்ஜூன் ரோஜா இடையேயான ரொமான்ஸ் கட்சிக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
தற்போது பிரச்சினைகள் முழு மூச்சாக ஓடிக்கொண்டடிருக்கும் இந்த வேளையில் திருமணமாகி சில ஆண்டுகளுக்கு பிறகு ரோஜா கர்ப்பமாக இருப்பதாக கதை நகர்ந்துகொண்டிருக்கிறது. குழந்தை நல்லபடியாக பிறக்க ரோஜா பூஜைக்கு ஏற்பாடு செய்ய, அந்த பூஜையை கெடுக்க அனு திட்டம் தீ்ட்ட அந்த திட்டத்தை முறியடிக்க வழக்கம்போல் அர்ஜூன் குறுக்க நிக்க கதை பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது
இந்த பிஸி ஷெடியூலுக்கு நடுவில் நடிகை பிரியங்கா நல்காரி சோலோவாக டூர் சென்றுள்ளார். தற்போது கர்நாடகத்தில் நிலவி வரும் சீசன் காலத்தின குளிர்ச்சியை என்ஜாய் பண்ணவதற்காக ரோஜா தனது பூர்வீகமான கர்நாடகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மலை சார்ந்த இடங்களுக்கு சென்றுள்ள பிரியங்கா அங்கு எடுத்தக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஊஞ்சல் ஆடுவதும், புல்தயைில் படுத்து ரசிப்பதும், அருவி தண்ணீரில் ஜாலியாக விளையாடுவது என செம்ம என்ஜாமெண்டாக இருந்துள்ளார். இந்த புகைபபடங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், என்னதான் தனியா போனாலும் இப்படியா பூச்சி எதுவும் கடிச்சிடாமல் பத்திரம் என்று கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் எல்லாம் சரி உங்களுக்காக வீட்டில் பூஜை எல்லாம் பண்றாங்க சீக்கிரம் வாங்க என்று என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil