சின்னத்திரையின் பிரபல சீரியல் நடிகையாக வலம் வரும் பிரியங்கா நல்காரி தனது கணவருடன் நீச்சல் குளத்தில் இருந்து வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் அவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அதற்கு முன்பு தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிரியங்காவின் பெயர் மறந்து அவரை அனைவரும் ரோஜா என்று அழைக்கும் அளவுக்கு பெயர் வாங்கி கொடுத்தது இந்த சீரியல்.
/indian-express-tamil/media/media_files/rQjtZlgQM46RZ4br3O6u.jpg)
ரோஜா சீரியல் ஒரு கட்டத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற சீரியலில் நடித்து வந்தார். ரோஜா சீரியல் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மாமியார் – மருமகள் ஆடுபுலி ஆட்டத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்ட்டுள்ள இந்த சீரியல் பிரியங்காவுக்கும் ரசிகர்கள் மத்தியில் ரோஜாவின் பெயரை நிலை நிறுத்தியது.
/indian-express-tamil/media/media_files/lz8P5IpEjNK4OIInvKNG.jpg)
ரோஜா சீரியல் போலவே இந்த சீரியலும் பிரியங்காவை இல்லத்தரசிகள் மத்தியில் கொண்டு சேர்ந்த நிலையில், திடீரென தனது காதலர் ராகுல் என்பரை திருமணம் செய்துகொண்ட பிரியங்கா நல்காரி, சீதா ராமன் சீரியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தயில் சோகத்தை ஏற்படுத்தினாலும் அவரின் திருமண வாழ்க்கை நன்றாக அமைய பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பி வைத்தனர்.
/indian-express-tamil/media/media_files/7CXntpvWAxCZf7OnHJa3.jpg)
மேலும் திருமணத்திற்கு பின் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதாக கூறப்பட்ட பிரியங்கா, சின்னத்திரைக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், திடீரென ஜீ தமிழின் நள தமயந்தி என்ற சீரியல் மூலம் ரீ-என்டரி ஆனார். ஹோட்டல் நடத்தி வரும் ஒரு ஏழை பெண்ணுக்கும் தொழிலதிபருக்கும் இடையே நடக்கும் மோதல் தான் இந்த சீரியலின் கதை என்று கூறப்படும் நிலையில், கடந்த வாரம் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
/indian-express-tamil/media/media_files/bWJjhur5H8EPCiQMk3lE.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் தனது கணவருடன் ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“