/tamil-ie/media/media_files/uploads/2023/06/Priyanka-Ruth.jpg)
நடிகை பிரியங்கா ருத்
சமீப காலமாக திரையுலகில் நடிகைகள் தங்களது விவாகரத்து, லவ் பிரேக்அப் இவற்றை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். போட்டோஷூட் எடுப்பது, நடனமாடி சமூகவலைதளங்களில் பதிவிடுவது என வித்தியாசமான செயல்களில் ஈடுபட்டு வருகினறனர். இதில் சின்னத்திரை நடிகை ஷாலினி, பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் ஆகியோர் வரிசையில் தற்போது பார்த்திபன் பட நடிப்பை இணைந்துள்ளார்.
பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியங்கா ருத், விஜய் டிவியின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழகத்தின் கோயம்புத்தூரை சேர்ந்த இவர், மாடலாக தனது பயணத்தை தொடங்கி, சின்னத்திரையில் பூவே பூச்சூடவா, கல்யாணமாம் கல்யாணம் உள்ளிட்ட தொடர்களின் மூலம பிரபலமானார்.
சன் டிவியில் கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ், கா கா கா போ, மற்றும் கிராமத்தில் ஒரு நாள் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற நிலையில், பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தற்போது இவர் தனது சமூகவலைதளத்தில் வெளிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பதிவில், நச்சரிக்கும் உறவியில் வெளிவந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைராகி வரும் நிலையில், இவர் யாரை காதலித்தார் அல்லது இது ப்ராங்க் வீடியோவா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், பிரேக்அப்பை கூட இப்படி கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.