தமிழ் சின்னத்திரையின் முக்கிய நடிகையாக இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி தற்போது நாயகியாக நடித்துள்ள கன்னட படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
Advertisment
2007-ம் ஆண்டு கன்னட சின்னத்திரையில் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி, 2011-ம் ஆண்டு பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, இளவரசி, சரவணன் மீனாட்சி, நச்சுபுரம், இது சொல்ல மறந்த கதை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தார்.
அதேபோல் 2012-ம் ஆண்டு பாரிஜாதா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். தமிழில் ஆர்யா நயன்தாரா நடிப்பில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் ரீமேக்கான இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ரச்சிதா மகாலட்சுமி நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் உப்புக்கருவாடு, படத்தில் நடித்த இவர், தற்போது ரங்கநாயகா என்ற படத்தின் மூலம் நாயகியாக கன்னட சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். முதல் படத்திலேயே 60 வயதை கடந்த நடிகரும் அரசியல்வாதியுமான, ஜக்கேஷ்-க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
1911-ல் கன்னட சினிமா எப்படி இருந்தது என்பதை அடிப்படையாக வைத்து திரைப்பதை அமைக்கப்பட்டுள்ள ரங்கநாயகா திரைப்படம் வரவேற்பை பெற்று வருகிறது. பெங்களூருவை சேர்ந்த ரச்சிதா 2013ல் தினேஷ் மற்றும் ரச்சிதா திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த ரச்சிதா கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு கணவரை பிரிந்தார்.
தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதற்காக பிக்பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் ரச்சிதா. நிகழ்ச்சி முடிந்ததும் எதிர்பார்த்தபடியே அவருக்கு தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதில் தற்போது தமிழில், மெய் நிகரே, எக்ஸ்ட்ரீம், ஃபையர் உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதனிடையே ரச்சிதா கதாநாயகியாக நடித்த கன்னட படமான ரங்கநாயகா படம் நேற்று வெளியானது. ஜாகேஷுக்கு ஜோடியாக ரசிதா நடித்த ரங்கநாயகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ரச்சிதா நடித்துள்ள தமிழ் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“