சின்னத்திரையின் முக்கிய நடிகைகளில் ஒருவரான ரக்ஷிதா விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
Advertisment
அந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அவர், சரவணன் மீனாட்சி சீசன் 2, சீசன் 3, ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். இதன் மூலம் முன்னணி சீரியல் நடிகையாக உயர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து பல இவர் நடித்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் மகா என்ற கேரக்டரில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அங்கீகாரம் கிடைத்து.
பரபரப்பாக சென்றுகொண்டிருந்த இந்த சீரியலில் இருந்த ரக்ஷிதா மகாலட்சுமி திடீரென விலகுவதாக அறிவித்தார். கன்னட சினிமாவில் நாயகி வாய்ப்பு கிடைத்ததால் அவர் சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.
அதே சமயம் கருத்து வேறுபாடு காரணமாகவும் விலகியதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து கலர்ஸ் தமிழின் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வந்தார்.
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். சமீபத்தில் திடீரென இந்த சீரியல் முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாது ரக்ஷிதாவும் அதிர்ச்சியில் உறைந்தார்.
ஆனாலும் தனது அடுத்தகட்ட வேளைகளில் பிஸியாகிவிட்ட ரக்ஷிதா அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த பதிவுகள் அவ்வப்போது வைரலாகி வரும் நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil