Advertisment

வடுக்களை வலிமையாக மாற்ற... நடிகை ரச்சிதாவின் டாட்டூ பார்த்தீங்களா?

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் 2ஆம் பாகத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rachitha Mahalakshmi

நடிகை ரச்சிதா மகாலட்சுமி

விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது வெளியிட்டுள்ள டான்சிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

தமிழ் சின்னத்திரையில், விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. அதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி தொடரில் நடித்தார்.

publive-image

தொடர்ந்து விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் 2ஆம் பாகத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில்  பிரபலமானார்.

publive-image

அடுத்து விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடித்து வந்தார். அந்த தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

publive-image

தொடர்ந்து கலர்ஸ் தமிழின் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்தார். ஆனால் இந்த சீரியல் திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

publive-image

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமல்லாமல் தமிழில் உப்புக்கருவாடு உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது 3 கன்னட படம், ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

publive-image

மேலும் ஹம் சொல்றீயா ஹூம்ஹூம் சொல்றீயா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் ரச்சிதா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

publive-image

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Rachitha Mahalakshmi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment