மனைவியை நினைத்து உருகிய தினேஷ்... உங்கள்ட நிறைய சொல்லனும் : ரச்சிதா வைரல் பதிவு

நாங்கள் இருவரும் பிரபலங்கள் என்பதால் எங்களை பற்றி அனைவருக்கும் தெரியும். கணவன் மனைவிக்கு இடையெ ஏற்படும் பிரச்சனை தான் எங்களுக்கும் ஏற்பட்டது என தினேஷ் கூறியிருந்தார்

நாங்கள் இருவரும் பிரபலங்கள் என்பதால் எங்களை பற்றி அனைவருக்கும் தெரியும். கணவன் மனைவிக்கு இடையெ ஏற்படும் பிரச்சனை தான் எங்களுக்கும் ஏற்பட்டது என தினேஷ் கூறியிருந்தார்

author-image
WebDesk
New Update
Rachitha Dinesh

ரச்சிதா மகாலட்சுமி - தினேஷ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மனைவி ரச்சிதா குறித்து உருக்கமாக பேசிய நடிகர் தினேஷ் வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரச்சிதா வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் வைல்ட் கார்டு என்டரியாக உள்ளே வந்த நடிகர் தினேஷ், இந்த வார கேப்டனாக பிக்பாஸ் வீட்டில் உலா வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே நேற்று கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் தினேஷ் தனது மனைவி ரச்சிதா மகாலட்சுமிக்கும் தனக்கும் என்ன பிரச்சனை என்று கூறியிருந்தார்.

நான் என் வாழ்க்கையில் சந்தித்த பெரிய இக்கட்டான சூழ்நிலை என்றால், அது என் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை தான். நாங்கள் இருவரும் பிரபலங்கள் என்பதால் எங்களை பற்றி அனைவருக்கும் தெரியும். கணவன் மனைவிக்கு இடையெ ஏற்படும் பிரச்சனை தான் எங்களுக்கும் ஏற்பட்டது. ஈகோ காரணமாக இருவருமே இந்த பிரச்சனையில் சரியான முடிவு எடுக்க தவறிவிட்டோம். ஒரு கட்டத்தில பெற்றோர்களால் கூட தீர்த்து வைக்க முடியாத பிரச்சனையாக மாறிவிட்டது.

அந்த காலக்கட்டத்தில நான் மட்டுமல்ல என் மனைவியும் ரொம்பவே மனமுடைந்து போய் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். இதுதான் என் வாழ்க்கையில் நான் சந்தித்த மோசமான பிரச்சனைகள் கஷ்டங்கள் என்று சொல்லலாம். இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்புவதாக உருக்கமாக தினேஷ் பேசியிருந்தார். தினேஷ் பேச்சு இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனார்.

Advertisment
Advertisements

இதனிடையே தற்போது ரச்சிதா வெளியிட்டுள்ள பதிவில், வலியின் குணம் வலியில் இருக்கிறது. இதுதான் வாழ்க்கையின் உண்மை. உங்கள் வாழ்க்கையை ஆன்மீக ரீதியாக திரும்பவும் தொடங்குங்கள். நான் உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டுமானால் அமைதியாகவும் மௌனமாகவும் இருப்பது தான் இப்போது என் விருப்பமாக உள்ளது என்று தனது அம்மாவுடன் ஈஷா மையத்திற்கு சென்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு கூறியுள்ளார் ரச்சிதா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Serial Actress Rachitha Mahalakshmi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: