Advertisment

ஓட்டுனராக ரச்சிதா... சன் ரூப் வீடியோ எடுத்த சிவின்; காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் சிவினுடன் இணைந்து காரில் சென்றபோது எடுத்த செல்பி வீடியோ தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Rachitha Maha Shivan

சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது பிக்பாஸ் தோழி சிவினுடன் கார் பயணம் மேற்கொண்ட வீடியோ பதிவில், சிவின், காரின் சன் ரூப்பில் தலையை காட்டியுள்ளதாக அவர் மீத நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் பலரும் தங்களது சுய விளம்பரத்திற்காக விபரீதமாக முயற்சிகளில் ஈடுபட்டுவது வழக்கமா ஒன்றாக இருக்கிறது. இதில் வாகனத்தில் பயணித்துக்கொண்டே, செல்பி, மற்றும் ரீல்ஸ் வீடியோ எடுப்பது அதிகரித்து வருகிறது. ஆபத்தை உணராமல் இவர்கள் செய்யும் செயல், சாதாரணமாக வானத்தில் சென்றுகொண்டிருக்கும் சிலரையும் விபத்தில் ஆழ்த்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதனை தடுக்க, சாலை போக்குவரத்த காவல்துறை, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்தாலும், வலைதளவாசிகளின் இந்த மாதிரியான விபரீத முயற்சிகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி இந்த வரிசையில் இணைந்துள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ லைக்ஸ் பெற்று வந்தாலும், விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

ரச்சிதா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் கார் ஓட்ட, அந்த காரில் பிக்பாஸ் சிவன் பயணித்துள்ளார். அவர் காரின் சன் ரூப்பில் தலையை நீட்டியபடி செல்பி வீடியோ எடுக்க, காரை ஓட்டியபடி ரச்சிதாவும் போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. காரில் செல்லும்போது சூரிய ஒளி காருக்குள் வர வேண்டும் என்பதற்காக சன் ரூப்பை திறந்துவிடுவார்கள். ஆனால் இந்த சன் ரூப்பில் தலையை நீட்ட கூடாது என்பது போக்குவரத்து விதியாக உள்ளது.

அதே சமயம் செல்பி மோகத்தில் இருக்கும் இளைஞர்கள் பலரும் சன் ரூப்பில் இருந்தபடி செல்பி எடுக்கின்றனர். இவர்களை பார்த்து குழந்தைகளும் இந்த முயற்சியை மேற்கொள்ள ஆசைப்படுகின்றனர். இந்த விபரீதமான முயற்சியில் தற்போது ரச்சிதா மகாலட்சுமி தனது தோழியுடன் ஈடுபட்டுள்ளதால், நெட்டிசன்கள் பலரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியை எடுப்பியுள்ளனர். மேலும் மலை பிரதேசத்தில் கார் ஓட்டும் ரச்சிதா மகாலட்சுமி அது எந்த இடம் என்று குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Serial Actress Rachitha Mahalakshmi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment