விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி அந்த தொடரின் நாயகனான நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில ஆண்டுகளில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், தற்போது ரச்சிதா தனியாக வசித்து வருகிறார்.
இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா மகாலட்சுமியும் போட்டியாளராக பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக ரச்சிதாவை வாழ்த்தி தினேஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார், ஆனால் அதைப் பார்த்து ரச்சிதா எந்த பதிலும் அனுப்பவில்லை. இருப்பினும், பிக்பாஸில் கடைசி வரை விளையாடிய ரச்சிதாவுக்கு ஆதரவாக தினேஷ் தனது சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
ஆனால் ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது கணவரை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் அவர் தனது கணவரை பற்றி பேசவில்லை. இதனிடையே மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரச்சிதா, ‘ஒற்றையும், பணிபுரியும் பெண்களும் இனி ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம்’ “அது போதும். இங்கிருந்து தொடங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனிடம் பேசிய ரச்சிதா, தனக்கு 35 வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அனாதை இல்லத்திற்கு சென்ற ரச்சிதா, ‘ குழந்தைகள் என்பது எல்லா பெண்களின் ஆசை, எனக்கும் குழந்தைகளை மிகவும் பிடிக்கும். பெண் குழந்தைகளைப் பார்த்தாலே கீழே விழுந்துவிடுவேன். குழந்தைகளை எப்படி பார்க்கிறேனோ அதே மாதிரி பெரியவர்களையும் இங்கு பார்க்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.’
அவர் சமீபத்தில் ஒரு முதியோர் இல்லத்திற்குச் சென்றபின் வெளியிட்ட ஒரு பதிவில், தீர்ப்பதற்கு முன் சிந்தியுங்கள். இந்த வயதான குழந்தைகளுடன் செலவழித்த வாழ்க்கை ஒன்றும் இல்லை என்று உணர்ந்தேன்……. உண்மையான வாழ்க்கை வாழ்வது போல் எளிதானது அல்ல. மக்காலே… ஒய்….? இந்த வயதான குழந்தைகள் இப்படி கஷ்டப்படுவதை பார்த்து மிகவும் நொந்து போனார்கள்…. அவர்கள் கண்டிப்பாக இதற்கு தகுதியானவர்கள் அல்ல….. Plzzzzzz உங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற இல்லங்களை நடத்தும் தன்னார்வலர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்.
கடவுள் உங்கள் மீது ஆசீர்வாதங்களைத் தொடங்கியுள்ளார். திரும்பக் கொடுக்க வேண்டிய நேரம் இது…. அவர் என் மீது பொழியும் ஆசீர்வாதங்களுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லும் எனது வழி….நிதி ரீதியாக வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல்,. கொடுக்கும் வாழ்க்கை தரத்தை உயர்த்துங்கள்…… அவர்களைச் சுற்றி சில அரவணைப்பையும் ஆசீர்வாதத்தையும் நான் எப்போதும் உணர்கிறேன்…..
இந்த பேரன்புக்கு முழு அர்த்தமும், அவர்களுக்குச் சேவை செய்வதும், உங்கள் அனைவருக்கும் தேவையானதைச் செய்யுமாறு கேட்டுக் கொள்வதும்தான் எனது தூய்மையான மகிழ்ச்சிக்கான ஒரே வழி….. அவர்களுக்கு கண்டிப்பாக நமது ஆதரவு தேவை.
எஸ் இந்த பதிவு பப்ளிசிஸிங் செய்வதற்காகவே….. அவர்களுக்கு நாம் தேவை. இப்போது அவர்களுடன் உங்களை கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்…… தயவுசெய்து ஆதரவு கொடுங்கள்” என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“