Advertisment
Presenting Partner
Desktop GIF

விசித்ரா - தினேஷ் மோதல்... சப்போர்ட்க்கு வந்த ரச்சிதா : கடைசில இப்படி ஆகிடுச்சே!

தனது மனைவி ரச்சிதா குறித்து தினேஷ் உருக்கமாக பேசியதால், தினேஷை பார்க்க, ரச்சிதா பிக்பாஸ் வீட்டுக்கு வருவரா என்ற கேள்வி எழுந்தது.

author-image
WebDesk
New Update
Rachitha Dines

தினேஷ் - ரச்சிதா மகாலட்சுமி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு  என்டரியாக உள்ளே வந்த நடிகர் தினேஷ் தனது மனைவி குறித்து உருக்கமாக பேசியது வைரலாக பரவிய நிலையில், அவரை பார்க்க பிக்பாஸ் வீட்டுக்கு மனைவி ரச்சிதா வருவரா என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஃப்ரீஸ் டாஸ்க் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களின் பெற்றோர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகின்றனர். முதல்கட்டமாக, பூர்ணிமா அர்ச்சனா, மணி விக்ரம் ஆகியோரின் பெற்றோர்கள் என்டரி கொடுத்தனர்.

இதனிடையே தனது மனைவி ரச்சிதா குறித்து தினேஷ் உருக்கமாக பேசியதால், தினேஷை பார்க்க, ரச்சிதா பிக்பாஸ் வீட்டுக்கு வருவரா என்ற கேள்வி எழுந்தது. அதேபோல் தினேஷை பார்க்க யார் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், அவரை பார்க்க அவரது பெற்றோர்கள் வந்துள்ளனர்.

சின்னத்திரையில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த தினேஷ் – ரச்சிதா ஜோடி காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த சில வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிரிவு சின்னத்திரை வட்டாரத்தில் அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும், தினேஷ் பிக்பாஸ் வீட்டில் பேசியதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.

Rachitha Vichithr

ஆனால் இருவரும் இணைவது சாத்தியமில்லாதது என்று சொல்லும் வகையில் ரச்சிதா தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீ்ட்டில் தினேஷ் – விசித்ரா இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், இதில் விசித்ராவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பெண்கள் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்று ரச்சிதா பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் அவருக்கு தினேஷ் மீதான கோபம் இன்னும் குறையவில்லை என்று தெரியவருகிறது. கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரச்சிதாவுக்கு ஆதரவாக தினேஷ் பல பதிவுகளை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது தினேஷ்க்கு எதிராக ரச்சிதா பதிவிட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சண்டை வரும்போதெல்லாம், தினேஷ் அவரது வீட்டிலும் இப்படித்தான் இருப்பார் போல என்று விசித்ரா கூறிய நிலையில், தற்போது ரச்சிதா அவருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment