Actress Rachitha Mahalakshmi Ready To Second Marriage : சின்னத்திரையின் முன்னணி நடிகையாக வலம் வரும் ரச்சிதா மகாலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வெளியான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது ஜீ தமிழின் இது சொல்ல மறந்த கதை சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது முதல் சீரியலான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பரை காதலித்து கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ரச்சிதா ஓரிரு வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்தார். அதன்பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்த அவர், கன்னட படவாய்ப்பு காரணமாக அந்த சீரியலில் இருந்து பாதியில் வெளியேறினார்.
தற்போது கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில், தான் கணவரை பிரிந்துவிட்டது குறித்து ரச்சிதா சமீபத்தில் பேசியிருந்தார். இந்நிலையில், தற்போது ரச்சிதா 2-வது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஒரு இயக்குநரை காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாகவும கூறப்படுகிறது.
அந்த இயக்குநர் யார் என்ற தகவல் வெளியாகாத நிலையில்,இது குறித்து ரச்சிதாவும் எவ்வித பதிலும் அளிக்காமல் உள்ளார். இதனால் கிட்டத்தட்ட அவர் 2-வது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக கூறி ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கன்னடத்தில் பாரிஜாதா என்ற படத்திலும், தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் நடித்திருந்த ரச்சிதா தற்போது ரங்கநாயகா என்ற கன்னட படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“