Actrss Radhika Sarathkumar opened Showroom : 1980-90 களில தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த, என பல்வேறு நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனக்கென தனி இடத்தை பெற்ற இவர், 90-களின் இறுதியில் சின்னத்திரையில், கால்பதித்தார். இதில் சன்டிவியில் கடந்த 13 ஆண்டுகாளாக சித்தி, அண்ணாமலை, வாணி ராணி,செல்வி, அரசி என பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார். இதில் அவர் நடித்த சித்தி தொடர் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் சின்னத்தரை, பெரியத்திரை என மாறி மாறி நடித்து வந்த ராதிகா தற்போது சின்னத்திரையில் இருந்து விலகியுள்ளார். தனது கணவருடன் இணைந்து தீவிர அரசியலில் களமிறங்கவுள்ளதால் சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது தான் நடித்த அரசி சீரியலில் தன்னுடன் நடித்த சீரியல் நடிகையின் கடையை திறந்து வைத்துள்ளார். நாடக நடிகை பூர்ணிமாவின் மகளான நடிகை சந்தோஷி. தமிழில் வீராப்பு, போர்களம், மரியாதை என ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தமிழில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘பாபா’ படத்தில் மனிஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்து பிரபலமடைந்தார். திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை சந்தோஷி பல நடிகைகளுக்கு மேக்கப் போட்டு அழகு செய்வதை தன் முழு நேர வேலையாக பார்த்து வருகிறார். அந்த வகையில் நடிகை சந்தோஷி பிளஸ் (plush) என்ற பொட்டிக் கடைகளை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கிய இந்த கடையை நடிகை ராதிகா திறந்து வைத்துள்ளார்.
இதில் சமீபத்தில் சந்தோஷி சென்னையில் புதிய பிரான்ச் ஒன்றை தொடங்கியுள்ளார். பொட்டிங் கடை போன்று இதனையும், நடிகை ராதிகா திறந்து வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை சந்தோஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"