பூவே உனக்காக சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ராதிகா ப்ரீத்தி எவ்வளவு தான் அட்ஜெஸ்ட் செய்துகொண்டு நடிப்பது என்று எழுப்பியுள்ள கேள்வி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா மற்றும் சின்னத்திரையில், அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற வார்த்தை சர்வ சாதாரணமாக கேட்கபப்டுவதாகவும், நடிகைள் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை வைத்து வாய்ப்பு கொடுப்பதாகவும் அவ்வப்போது பலரும் கூறி வருகின்றனர். சமூகவலைதளங்களில் பெருகி, ஒரு சின்ன சம்பவம் கூட பெரியதான வைரலாகும் இந் காலக்கட்டத்திலும் திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் இந்த பிரச்சனை மட்டும் இன்னும் தீர்ந்த பாடில்லை.
இந்த மாதிரியான சம்பங்களால் பாதிக்கப்படும் நடிகைள் அவ்வளவாக வெளியில் சொல்லாத காலம் மாறி தற்போது மீடு மூலம் பலரும் தங்களது கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். வளர்ந்த நடிகைகளிடம் ஒரு மாதிரியும், வளர்ந்து வரும் நடிகைளிடம் ஒரு மாதியும் நடந்துகொள்ளும் வழக்கம் சினிமாவில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் நடக்கிறது என்று நகை ராதிகா ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் சீரியலில் நடிக்கும்போது நான் ரெடியாக வேண்டும் என்பதற்காக என்னை ஒரு பேச்சிலர் ரூமுக்கு அனுப்பினார்கள். அங்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்று போனபோது அங்கு ஒருவர் சட்டை இல்லாமல் டவுசருடன் படுது்திருந்தார். நான் உள்ளே போனவுடன் அவர் வெளியில் போய்விடுவார் என்று நினைத்தேன். ஆபால் அவர் போகவே இல்லை. இதனால் நான் எப்படி அங்கு ரெடி ஆக முடியும். உடனடியாக அங்கிருந்து வெளியில் வந்துவிட்டேன்.
சீரியல் குழுவினரிடம் நான் எப்படி அங்கு ரெடியாக முடியும் என்று கேட்டபோது, பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகளே இதெல்லாம் கண்டுக்காம ரெடி ஆவாங்க. நீ இப்போதானே வந்திருக்க. இதெல்லாம் அட்ஜெஸ்ட் பண்ணிதான் போகனும் என சொன்னார்கள். எவ்வளவுதான் அட்ஜெஸ்ட் பண்ணி நடிப்பது" என்று ராதிகா ப்ரீத்தி தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“