scorecardresearch

சீரியலில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர்… மணிமேகலை vs குக் வித் கோமாளி… டாப் 5 சீரியல்

ராதிகா சரத்குமார் அடுத்து தயாரிக்க உள்ள சீரியலில் நடிகர் விஜயின் அப்பாவும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீரியலில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர்… மணிமேகலை vs குக் வித் கோமாளி… டாப் 5 சீரியல்

முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் பிரபல சீரியல் நடிகை

சீரியலுக்கு பெயர் பெற்ற சன் டி.வி.யில் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெண்களின் வாழ்வியலை மையப்படுத்தி எதார்த்தமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் தற்போது 300 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ப்ரியதர்ஷினி. இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணிமேகலை vs குக் வித் கோமாளி

விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவராக அதிக ரசிகர்களை பெற்றுள்ளவர் மணிமேகலை. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல், காமெடியிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இவர் ஏன் வெளியேறினார் என்று ரசிகர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் வெளியேறிவிட்டார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

மௌனராகம் 2 கடைசி நாள் ஷூட்

விஜய் டிவியின் பிரபலமான சீரியல்களில் ஒன்று மௌனராகம். கடந்த 2017-ம் தொடங்கப்பட்ட இந்த சீரியலின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 2020-ம் ஆண்டு மௌனராகம் 2 என இரண்டாம் சீசன் தொடங்கப்பட்டது. முதல் சீசனை போல் 2-வது சீசனும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த சீசன் முடிவுக்கு வர உள்ளது. இந்த சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீண்டும் சீரியலில் ராதிகா

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடிப்பு தயாரிப்பு என பல வெற்றிகளை கொடுத்த நடிகை ராதிகா சரத்குமார் கடைசியாக சன்டிவியின் சித்தி 2 சீரியலில் நடித்தார். ஆனால் அந்த சீரியலில் இருந்து பாதியில் விலகிய ராதிகா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் டிவியில் தொடங்கப்பட்ட பொன்னி கேர் ஆஃப் ராணி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதனிடையே ராதிகா சரத்குமார் அடுத்து தயாரிக்க உள்ள சீரியலில் நடிகர் விஜயின் அப்பாவும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொகுப்பாளினி டி.டி.யின் வைரல் வீடியோ

விஜய் டிவியின் முக்கிய தொகுப்பளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி. சுருக்கமாக டிடி என்று அழைக்கப்படும் இவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள டிடி மேக்கப் இல்லாமல் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress radhika sarathkumar with director sac

Best of Express