/indian-express-tamil/media/media_files/2025/08/16/annamalali-2025-08-16-00-25-30.jpg)
தமிழ் சினிமாவில் ஒருவர் வளர்ந்து வரும் ஹீரோ படத்தில் எவ்வளவு பெரிய கேரக்டரில் நடித்திருந்தாலும், சில மாதங்களில் அந்த கேரக்டர் மறந்து போய்விடும். அதே சமயம் ஒரு பெரிய நடிகரின் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும், சில ஆண்டுகள் கழித்து இந்த நடிகரின் படத்தில் இவர் நடித்திருதாரே இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்ற கேள்வி எழும். அந்த வகையில் ரஜினிக்கு மகளாக நடித்த ஒரு நடிகையை பற்றி தான் பார்க்க போகிறோம்.
கடந்த 1992-ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் அண்ணாமலை. ரஜினிகாந்த், குஷ்பு, சரத்பாபு, மனோரமா, ராதாரவி, ரேகா, ஜனகராஜ், நிழல்கள் ரவி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தத நிலையில், படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்து, ரஜினிகாந்தின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை உயர்த்தியது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்த படத்தில் தேவா இசையமைத்த பின்னணி இசை தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகோவுக்கான இசையான இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு புகழ்பெற்ற இந்த படத்தில், ரஜினிக்கு மகளாக நடித்தவர் தான் நடிகை தாட்சாயினி. பால்காரன் அண்ணாமலைக்கும் பணக்காரன், அசோக்கிற்கும் இடையே இருந்த நட்பு பிரிந்து, மோதலாக வெடித்து இறுதியில் என்ன நடக்கிறது என்பது தான் இந்த படத்தின் கதை. இதில் பால்காரன் அண்ணமலையான ரஜினி, பணக்காரன் அசோக்காக சரத்பாபு நடித்திருந்தார்.
படத்தின் இறுதிக்கட்ட காட்சியில், இருவருக்குமே வயதாகிவிடும். அப்போது சரத்பாபுவுக்கு ஒரு மகனும், ரஜினிக்கு ஒரு மகளும் இருப்பார்கள். சரத்பாபு மகனாக நடிகர் கரண் நடித்திருப்பார். ரஜினிகாந்துக்கு மகளாக தாட்சாயினி நடித்திருப்பார். ரஜினிகாந்தின் தீவிர ரசிகையான இவர், இந்த படத்திற்கு முன்னதாகவே ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் சீரியல்களில் நடித்து வரும் தாட்சாயினி, தமிழில், அன்னம் சீரியலில் நடித்து வருகிறார்.
அதேபோல் வானத்தைப் போல சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த தாட்சாயினி சமீபத்திய ஒரு நேர்காணலில் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அண்ணாமலை ரஜினி மகளா இவர் என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.