/tamil-ie/media/media_files/uploads/2023/07/Raveena.jpg)
மௌனராகம் சீரியல் நடிகை
விஜய் டிவியின் மௌனராகம் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ரவீனா தாஹா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Raveena-7.jpg)
தமிழ் சின்னத்திரையில், தங்கம் சீரியல் மூலம் அறிமுகமானவர் ரவீனா. சன்டிவியில் கடந்த 2009-ம் ஆண்டு இந்த சீரியல் ஒளிபரப்பானது இதில் அறிமுகமான ரவீனாவுக்கு அப்போது வயது 4.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Raveena-6.jpg)
அதனைத் தொடர்ந்து 63 நாயன்மார்கள், சாந்தி நிலையம், வசந்தம், ராமானுஜர், பைரவி, சந்திரலேகா போன்ற சில முக்கிய தொடர்களில் குறிப்பிடத்தக்க கேரக்டரில் நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Raveena-5.jpg)
அதன்பிறகு 2014-ம் ஆண்டு ஜில்லா படத்தின் மூலம் தமிழில் திரைத்துறையில் அறிமுகமான ரவீனா. நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Raveena-4.jpg)
மேலும் தமிழில், ஜீவா, பூஜை, புலி, ராட்சசன், கதை சொல்ல போறோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரவீனா கடைசியாக பீட்சா 3 என்ற படத்தில் நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Raveena-3.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரவீனா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 1.6 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Raveena-2.jpg)
இதனால் ரவீனா வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ரவீனா தற்போது சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Raveena-1.jpg)
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் மௌனராகம் ரவீனாவா இவர் என்று ஆச்சரயமடைந்து வரும் நிலையில் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.