New Update
/indian-express-tamil/media/media_files/12Wj2HyyRAr7CdBncUc8.jpg)
ரச்சிதா மகாலட்சுமி
தனது சக நடிகரான தினேஷை காதலித்து கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ரச்சிதா, கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.
ரச்சிதா மகாலட்சுமி
சின்னத்திரை தம்பதியான தினேஷ் ரச்சிதா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த நியா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் ஒருவருடன் ரச்சிதா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. 'பிரிவோம் சந்திப்போம்' என்ற சீரியல் மூலம் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி, அடுத்து 'சரவணன் மீனாட்சி' சீசன் 2 & 3 மூலம் பெரும் ரசிகர்களைப் பெற்றார். தனது சக நடிகரான தினேஷை காதலித்து கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ரச்சிதா, கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.
தற்போது சீரியல்களில் நடித்து வந்த ரச்சிதா கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது வீசனில் பங்கேற்று 91 நாட்கள் இருந்தார். இந்த 91 நாட்களும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது கணவர் தினேஷ் குறித்து ரச்சிதா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதே சமயம் சமீபத்தில் நிறைவடைகிறத பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் பங்கேற்ற தினேஷ், நிகழ்ச்சியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ரச்சிதா குறித்து பேசியிருந்தார்.
7-வது சீசனில் 3.-வது இடம் பிடித்த தினேஷ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவுடன், தனது நெருங்கிய நண்பரான நடிகை ஒருவருடன் இணைந்து புகைப்படம் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், அந்த நடிகை ரச்சிதாவுக்கும் நெருக்கமானவர் என்பதும் தெரியவந்தது. இதனிடையே தற்போது ரச்சிதா மகாலட்சுமி புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில், விவாகரத்தான பெண்களும் அவர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பதையும் தலைப்பாக வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சந்திரபிரபா என்ற பெண் டாக்டர் விவாகரத்தான் பெண்கள் பிரிவில் கலந்துகொண்டு பேசினார். இதில் விவாகரத்தான பெண்கள் சுயமாக நின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பேசியிருந்தார்.
தற்போது அவரை சந்தித்துள்ள ரச்சிதா மகாலட்சுமி, இது தொடர்பான வீடியோவை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் உறவு என்ற தலைப்புடன், ஒரு சில உறவுக்கு ஒன்றுமே இல்லை... ஆனாலும் எப்படித்தான் கனெக்ட் ஆகிறது தெரியல. ஆனா நிச்சயம் இது பிரபஞ்சத்தின் அழைப்பு தான். ஒரு சில சமயங்களில் ஆன்மா கேட்கும் மற்றும் சிந்திப்பதற்காக ஒரு மனம் தேவைப்படுகிறது. தி வொண்டர் வுமன் பேராசிரியர் டாக்டர் சந்திர பிரபா மேடம் உங்களை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுற்றிலும் காயப்பட்ட பல உயிர்களை தொட்டுள்ளீர்கள்.
உண்மையிலேயே உங்களுடைய பேச்சு எனக்கு ஊக்கம் அளிக்கிறது. எனக்கு மிகவும் தேவையாக இருந்த ஒரு குணப்படுத்தும் ஆராவை நீங்க தந்தீங்க. இன்னொரு நாள் நான் இதுபோல உஙகளை சந்திப்பதற்காக எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். எனக்குள் இழந்த நம்பிக்கையை நிரப்பியது நீங்கள் தான். நீங்கள் உண்மையிலேயே ஒரு உத்வேகமாக இருக்கிறீங்க. நிறைய குணமடையாத ஆன்மாக்களுக்கு ஒரு வெளிச்சத்தை தந்திருக்கிறீங்க
நமது சமுதாயத்தின் மங்கலான பார்வையை துடைக்க இங்கே நீங்கள் இருக்கிறீங்க. உங்கள் எண்ணங்கள், சித்தாந்தம் மற்றும் அறிவு தொகுப்புக்கு ஒரு பெரிய பெரிய வரவேற்பு. பழமையான நம்பிக்கை கொண்ட இந்த சமுதாயத்திற்கும் மக்களுக்கும் இன்னும் நிறைய தேவை. உங்களிடம் இருந்து ஞானம் நிறைய பேரை ஊக்கமளித்துக் கொண்டே இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தினேஷை வெறுப்பேற்ற ரச்சிதா இப்படி செய்கிறாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.