/indian-express-tamil/media/media_files/5CRyOaqQcO0jkZv0SFu6.jpg)
தற்போதைய காலக்கடத்தில் டிவி சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது என்று சொல்லலாம். இதை கருத்தில் கொண்டு ஒரு சீரியல் முடிவுக்கு வந்தவுடன் உடனடியாக புதிய சீரியலை ஒளிபரப்புவதும், புதிதான சீரியல்களை கொண்டு வருவதும் தொடர்ந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது சிங்க பெண்ணே என்ற தமிழ் சீரியல் தொடங்கியுள்ளது.
எதிர்நீச்சல் மற்றும் கயல் போன்ற பிரபலமான ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களை ஒளிபரப்பி வரும் சன்டிவியில் நவம்பர் 1 ஆம் தேதி (இன்று) முதல் 'சிங்க பெண்ணே' சீரியல் தொடங்க உள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு காணும் ஒரு விவசாயியின் மகளைச் சுற்றி இந்த சீரியலின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
தந்தையின் ஆதரவுடன் தனது கனவைத் தொடரும் அவர் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறார். இந்த டிவி சீரியலில் மனீஷா மகேஷ் மற்றும் ரமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த சீரியல் குறித்து நடிகை ரேகா ஏஞ்சலினா தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டார். இதில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“வணக்கம் நண்பர்களே, சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் உங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாக நாளை முதல் இரவு 8 மணிக்கு உங்கள் வீட்டிற்கு வருகிறேன். தயவு செய்து பாருங்கள். என்னை ஆதரித்த இறைவனுக்கு முதலில் நன்றி. அங்கீகாரம் அளித்து வாய்ப்பளித்த பாலா சார் மற்றும் மாலா மாம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார்.
நடிகை மற்றும் நடன இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை ரேகா, கலா, பிருந்தா கோபால் மற்றும் ரகுராம் போன்ற பல முன்னணி நடன இயக்குனர்களுடன் பணிபுரிந்துள்ளார் மற்றும் பல தமிழ் மற்றும் மலையாள பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தாலாட்டு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் வசந்தி. அதைத் தொடர்ந்து, சில்லுனு ஒரு காதல், திருமணம் மற்றும் சில தொடர்களில் நடித்தார். அவர் இந்த சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.