தெய்வமகள் சீரியலில் வில்லியாக நடித்து அசத்திய நடிகை ரேகா கிருஷ்ணப்பா தான் சீரியல் நடிப்பில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மலையாள சினிமாவில் முக்கிய கேரக்டரில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் ரேகா கிருஷ்ணப்பா. தொடக்கமே இவருக்கு வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தாலும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர், தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து தமிழில் பாரிஜாதம் சீரியல் மூலம் அறிமுகமான இவருக்கு, சன்டிவியின் தெய்வமகள் சீரியல் பெரிய அறிமுகத்தை கொடுத்தது. இந்த சீரியலில் ஒரு பெரிய குடும்பத்தை தனது கட்டப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மூத்த மருமகள் கேரக்டரில் வில்லியாக நடித்திருந்த ரேகா கிருஷ்ணப்பா தனக்காக தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
மேலும் இந்த சீரியலில் நடித்தன் மூலம் இவரின் உண்மையான பெயர் மறந்து, சீரியலில் ஹீரோ இவரை அண்ணியார் என்று அழைப்பதையே ரசிகர்களும் தற்போது இவரது பட்ட பெயராக வைத்துள்ளனர். அதன்பிறகு நந்தினி, தமிழும் சரஸ்வதியும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தாலும், தெய்வமகள் சீரியல் அளவுக்கு இவர் கேரக்டர் அழுத்தம் இல்லாமல் இருந்தது. குறிப்பாக ஜீ தமிழின் சீதாரமன் சீரியலில் இவர் இரடை்டை வேடங்களில் நடித்திருந்தாலும், பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.
விஜய் டிவியின் மிஸ்டர் அன்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் பங்கேற்ற ரேகா கிருஷ்ணப்பா, சமீபத்திய பேட்டியில் தனது சீரியல் மற்றும் சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். இதில், சீரியலில் நடிக்கும்போது நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் அப்போது சீரியல் போதும் என்று இருந்துவிட்டேன். ஒரு கட்டத்தில் சீரியல் கேரக்டர்கள் அனைத்தும் ஒரே மாதிரி வந்தததால் ஒரு பிரேக் தேவைப்பட்டது. அதனால் 3 வருடங்கள் சீரியலை விட்டுவிட்டு சினிமாவுக்கு சென்றுவிட்டேன்.
இந்த காலக்கட்டத்தில் 50-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தேன். தற்போது மீண்டும் சீரயிலில் நடிக்க வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“