Advertisment

பயில்வானுடன் மோதல்: கார் விபத்து வழக்கில் சிக்கிய நடிகை; யார் இந்த ரேகா நாயர்?

கார் விபத்தில் கூலி தொழிலாளி மரணமடைந்த சம்பவத்தில் சிக்கியுள்ள நடிகை ரேகா நாயர் பற்றிய தகவல்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rekha Nair Phjoto

நடிகை ரேகா நாயர் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார் மோதி கூலி தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

சென்னை ஜாஃபர்கான் பேட்டை பகுதியை சேர்ந்த மஞ்சன் (55) என்பவர்  சாலையில் படுத்து கிடந்தபோது, அவர் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மஞ்சனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தபோது, அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த விபத்தில், மஞ்சன் மீது மோதிய காரை ஓட்டியவர் நடிகை ரேகா நாயரின் டிரைவர் என்றும், அவர் ஓட்டிய கார், ரேகா நாயர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்து நடந்தபோது, ரேகா நாயர் காரில் இருந்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஓட்டுனர் பாண்டி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரேகா நாயர் யார் என்பது தொடர்பான தகவல்களை நெட்டிசன்கள் தேட தொடங்கியுள்ளனர்.

யார் இந்த ரேகா நாயர்?

தமிழ்நாட்டில் பிறந்த ரேகா நாயர், ஒரு எழுத்தாளராகவும் இருக்கிறார். புதுயுகம் சேனலில், சில மாதங்கள் தொகுப்பாளராக பணியாற்றிய இவர், அதன்பிறகு சன்டிவியில் 10 ஆண்டுகள் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பெரிய ஆர்வம் கொண்ட இவர், அவ்வப்போது யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து வருகிறார். இவரது பேச்சுக்கள் பெரும்பாலும் ஆண்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

சின்னத்திரை அறிமுகம்

கடந்த 2013-ம் ஆண்டு ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான வம்சம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாக ரேகா நாயர், தொடர்ந்து, விஜய் டிவியின் ஆண்டாள் அழகர், பகல் நிலவு, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களிலும், சன்டிவியின் பைரவி, பூவே உனக்காக உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார் ரேகா நாயர். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், படத்தில் பார்த்திபன் கேரக்டருக்கு அம்மாவாக நடித்திருந்தார். சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது.

பயில்வானுடன் மோதல்

யூடியூப் சேனலிகளில், நடிகைகள் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறி வரும் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், ஒருமுறை ரேகா நாயர் குறித்து சில கருத்துக்களை கூறியிருந்தார். இதனால் கோபமான ரேகா நாயர், பயில்வான் ரங்கநாதன், கடற்கரைக்கு காலையில் வாக்கிங் வந்தபோது, அவரை கண்டபடி திட்டினார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையாக மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

அவ்வப்போது நடிகைகள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறி வரும் பயில்வான் ரங்கநாதன், தற்போதைய தமிழ் சினிமாவில் பல நடிகைகள் குறித்தும் பேசியிருந்தார். அவர்கள் யாரும் இதுவரை பயில்வான் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்காத நிலையில், ரேகா நாயர் நேரடியாகவே அவருடன் மோதலில் ஈடுபட்டார். அதன்பிறகு ரேகா நாயர் ரசிகர்கள் மத்தியில் பெரிய பிரபமான நிலையில், அவரின் ஒவ்வொரு கருத்துக்களும் இணையத்தில் வைரலாக பரவ தொடங்கியது.

யூடியூப் சேனல்களுக்கு பேட்டி

தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வரும் ரேகா நாயர், ஆண்கள் அப்படித்தான் இருப்பார்கள் பெண்கள் தான் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று பல நேர்காணல்களில் கூறியுள்ளார். இவரின் கருத்துக்கள் அனைத்தும் ஆண்களுக்கு சாதகமாகவே இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

tamil cinema actress Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment