Advertisment

என் இஷ்டம்... எனக்கு பிடித்திருக்கிறது : உதடு பற்றிய விமர்சத்திற்கு நடிகை ரேஷ்மா பதிலடி

தற்போது சின்னத்திரையில் பாக்கியலட்சுமி மற்றும் சீதாராமன் சீரியலில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா, பிஸியாக இருந்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Reshma Pau

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி

உதடு பெரிதாக இருப்பதற்காக ஆப்ரேஷன் செய்துள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில, நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment

தமிழில் விஷ்னு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இந்த படத்தில் சூரியுடன் இணைந்து இவர் செய்த காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்து. அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த ரேஷ்மா, விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போது சின்னத்திரையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா, சினிமா சின்னத்திரை என பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது போட்டோஷூட் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வரும் நிலையில், அவ்வப்போது விமர்சனங்களையம் சந்தித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அதே சமயம் இந்த விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், ரேஷ்மா தனது உதட்டை பெரிதாக காட்டுவதற்காக ஆப்ரேஷன் செய்துள்ளார். இதனை பலரும் விமர்சித்து வரும் நிலையில், சமீபத்திய பேட்டியில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி, இது என் உதடு என் இஷ்டம். இது எனக்கு பிடித்திருக்கிறது. இதற்காக உங்களிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு அவ்வப்போது பதிலடி கொடுக்கும் ரேஷ்மாவின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

tamil serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment